Thursday, 1 August 2024

யாழ். பல்கலைக்கழக ஊழியர் தவறான முடிவெடுத்து உயிரிழப்பு..!!!

SHARE


யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர், தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட ஆய்வுகூட உதவியாளராகப் பணியாற்றி வந்த மேற்படி நபர், கடந்த 26ஆம் திகதி தவறான முடிவெடுத்து உயிரிழப்பதற்கு முற்பட்ட நிலையில் காப்பாற்றப்பட்டு பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், நேற்றையதினம் சிகிச்சையின்போது அவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா இறப்பு விசாரணைகளை மேற்கொண்டார்.
SHARE