தபால்மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு..!!!
ஜனாதிபதித் தேர்தலில் தபால்மூல வாக்களிப்புக்கான திகதிகள் இன்று புதன்கிழமை (14) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறும். குறித்த திகதிகளில் வாக்களிக்க முடியாதவர்களுக்கு செப்டம்பர் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் வாக்களிப்பு நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.