யாழில்.சகோதரனுடன் ஆலயத்திற்கு சென்று திரும்பிய யுவதி உயிரிழப்பு..!!!
யாழ்ப்பாணத்தில் சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதி விபத்து சிக்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு பகுதியை சேர்ந்த நேசராசா பானுசா என்ற யுவதியே உயிரிழந்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி பொன்னாலையில் உள்ள ஆலயம் ஒன்றிற்கு சென்று விட்டு , சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை , மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
அதில் காயமடைந்தவரை சங்கானை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.