பாடசாலை விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு..!!!
அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணை எதிர்வரும் 16.08.2024 வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சினால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து பாடசாலைகளுக்கு மூன்றாம் தவணைக்கான முதல் கட்டம் 26.08.2024 திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.