யாழில். காய்ச்சல் காரணமாக குழந்தை உயிரிழப்பு..!!!
காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வயதுப்பெண் குழந்தை நேற்றுமுன்தினம்(21) உயிரிழந்துள்ளது.
ஊர்காவற்றுறையைச் சேர்ந்த பிரேம்நாத் நிகாரிகா என்ற பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தொடர் காய்ச்சல் காரணமாக குறித்த குழந்தைக்கு கடந்த 20ஆம் திகதி பனடோல் சிரப் கொடுக்கப்பட்டது.
இருப்பினும் காய்ச்சல் மாறாத நிலையில், நேற்று முன்தினம் (21) யாழ். போதனா வைத்தியசாலையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.
எனினும் குழந்தை அன்று இரவே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இம்மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.