இன்றைய ராசிபலன் - 17.08.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத நல்லது நடக்கும். எதிரிகளாக இருந்தவர்கள் கூட உங்களுக்கு நல்லது செய்வார்கள். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். வருமானத்தை சிக்கனமாக செலவு செய்வதன் மூலமாகத்தான், மாத இறுதியில் சந்தோஷம் பிறக்கும். சேமிப்பை உயர்த்துவது நல்லது. தேவையற்ற நட்பு கூடாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுடைய பொறாமை குணம் உங்களை வாழ விடாது. அதிகப்படியான கண் திருஷ்டியால் உடல் சோம்பல், குடும்பத்தில் சண்டை வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். புதுசாக ஏதாவது பொருட்களை வாங்கினால் உறவுகளோடும் நண்பர்களோடும் தம்பட்டம் அடிக்காதீங்க.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். உற்சாகத்தோடு இந்த நாளை தொடங்குவீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று மாலை கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. பெரியவர்களின் ஆசீர்வாதமும் இறைவனின் ஆசிர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கையில் இருக்கும் பணம் செலவாகி விட்டதே என்று யோசிப்பதற்கு முன்பு, மகாலட்சுமி உங்களுக்கு நல்ல நல்ல வரங்களை வாரிக் கொடுப்பாள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் உடல் அசதி ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் முன்கோபம் வரும். இதனால் புதிய எதிரிகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருக்கவும். மேலதிகாரிகளை எதிர்த்து பேச வேண்டாம். தொழிலில் வரக்கூடிய சிக்கல்களை பொறுமையாக கவனிக்க வேண்டும் எதிலும் அவசரம் படாதீங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனது உங்களுக்கு இருக்கும். வேலையில் இருந்து வந்த தேவையற்ற பிரச்சனைகள் விலகும். பேங்க் பேலன்ஸ் உயரும். சொத்து சுகம் வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. அடமானத்தில் வைத்த நகைகளையும் மீட்டு எடுப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். இதனால் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பெற்றவர்களுக்கு தெரியாமல் எந்த ஒரு தவறையும் செய்யாதீங்க. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. பெரியவர்களின் ஆலோசனையை கேட்காமல் எந்த ஒரு முடிவும் எடுக்க வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பக்குவம் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. பிரச்சனைகள் வந்தாலும் அதை பொறுமையாக கையாளுவீர்கள். உங்களுடைய அனுபவம் நாலு பேருக்கு உதவும். அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் இன்று நீங்கள் உங்கள் கையால் விளக்கு ஏற்றி வைப்பீர்கள். இதனால் மனநிறைவு உண்டாகும் இரவு நல்ல தூக்கம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கையிருப்பு குறையும். தேவையற்ற நண்பர்களின் சாவகாசத்தால் பொருள் இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று மட்டும் இருந்தால் போதும். அனாவசியமாக மூன்றாவது நபர்கள் பிரச்சனையில் தலையிட வேண்டாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சுகமான வாழ்க்கை என்ன என்பதை அனுபவிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மனநிறைவு இருக்கும். விருந்தாளிகளின் வருகையால் சந்தோஷம் பிறக்கும். சுப செலவு ஏற்படும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் மீண்டும் நடக்கும். இன்று மாலை வெளியிடங்களுக்கு சென்று சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். எந்த ஒரு வேலையையும் திறமையாக செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டு. வேலையில் உங்களுடைய டார்கெட்டை சரியான நேரத்தில் முடித்து கொடுத்து பாராட்டு வாங்குவீர்கள். வருமானம் பெருகும் வண்டி வாகன யோகம் உங்களை தேடி வரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஆதரவு நிறைந்த நாளாக இருக்கும். ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் மனது ஈடுபடும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். புது மனிதர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை கொடுக்கும். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். சிரமங்களை எதிர்கொள்ள தயாராகிக் கொள்ளுங்கள்.