Thursday, 15 August 2024

இன்றைய ராசிபலன் - 15.08.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாளாக அமையும். சுப காரியங்கள் கைகூடி வரும். எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளின் மூலம் நிறைய லாபம் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் கெட்டி மேள சத்தம் கேட்க உண்டான பேச்சு வார்த்தைகள் தொடங்கும். குழந்தை பாக்கியம் தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு சீக்கிரம் நல்ல செய்தியும் உண்டு.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் தானாக விலகும். எதிரி தொல்லையும் நீங்கும். மன நிம்மதியோடு உங்களுடைய வேலையை பார்ப்பீர்கள். இரவு நல்ல தூக்கத்தையும் பெறுவீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பாராத வருமானம் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு. சொத்து சுகம் வாங்குவதற்கான யோகமும் இருக்கிறது. இன்றைய நாள் பெரியவர்களின் ஆசீர்வாதத்தோடு நல்லபடியாக செல்லும். இன்று மாலை குடும்பத்தோடு கோவிலுக்கு போகக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனது நிரம்ப மகிழ்ச்சியிருக்கும். நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் முடித்து விடுவீர்கள். சுறுசுறுப்போடு செயல்படுவீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். உற்சாகத்தோடு இந்த நாள் நகர்ந்து செல்லும். இந்த நாள் இறுதியில் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் உடல் சோர்வு ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.


சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப பொறுமையான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் பெருசாக அவசரப்படவே மாட்டீங்க. இன்று நிதானமாக சிந்தித்து செயல்படுவதால் பொருள் இழப்பு, பண இழப்பு ஏற்படாமல் தடுப்பீர்கள். முன் யோசனை உங்களுக்கு அதிகமாக இருக்கும். அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவதிலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் வாழ்க்கை மட்டுமல்ல உங்கள் கூட இருப்பவர்கள் வாழ்க்கையும் நன்றாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்க போகிறது. உங்களுடைய வேலையில் இடையூறு செய்வதற்கு நாலு பேர் இருப்பார்கள். பேசிய நேரத்தை கழிப்பார்கள். கவனமாக இருந்து கொள்ளுங்கள். தேவையற்ற நட்பிடம் இருந்து விலகி இருந்தால் நல்லது. படிக்கும் பிள்ளைகள் தாய் தந்தையரின் பேச்சை கேட்கவும். எந்த ஒரு விஷயத்திற்கும் அடம்பிடிக்காதீங்க.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் தலைநிமிர்ந்து பெருமையாக நடந்து கொள்வீர்கள். எதிரிகளோடு போட்டி போட்டு வெற்றி காண்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை நிலவும். சுப செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொள்வீர்கள். நீண்ட நாள் சிக்கல்கள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட்டு கேஸ் வழக்கு சொத்து பிரச்சனை எல்லாம் தீர்த்துக் கொள்ள இன்று நல்ல நாளாக அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். எல்லோரும் செய்ய சிரமப்படக்கூடிய வேலையை நீங்கள் சுலபமாக செய்து முடித்து விடுவீர்கள். பாராட்டும் கிடைக்கும். உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். சம்பள உயர்வு பதவி உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது. மாணவர்களுக்கு கலைஞர்களுக்கு என்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். செல்வ செழிப்பில் நீங்கள் உயர்ந்து இருப்பீர்கள். எதிர்பாராத பணவரவு கடன் பிரச்சனையை ஒரு முடிவுக்கு கொண்டு வரும். சுப செலவுக்கு தேவையான பணம் கையை வந்து சேரும். லோன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் எல்லாம் அதிலிருந்து விடுபட முயற்சிகளை மேற்கொள்ளலாம். இன்று நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரக்கூடிய நாள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைக்க வேண்டும். முன்பின் தெரியாத நபரோடு பழக வேண்டாம். ஆடம்பர செலவை குறைப்பது நல்லது. அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீங்க. வாழ்க்கை துணை பேச்சைக் கேட்டு நடக்கவும். அனுபவசாலிகள் சொல்வதை கேட்டால் நஷ்டம் வருவதை தவிர்க்கலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை எல்லாம் முன்கூட்டியே கொஞ்சம் பிளான் செஞ்சுப்பீங்க. திறமையாக செயல்படுவீர்கள். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். செலவு அதிகரிக்கும். இருந்தாலும் சமாளித்துக் கொள்வீர்கள். இறையருள் உங்களுக்கு நிறைவாக இருக்கிறது.
SHARE