Tuesday, 13 August 2024

இன்றைய ராசிபலன் - 13.08.2024..!!!

SHARE




மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். வருமானத்தில் சிக்கல்கள் வரும். கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். இருந்தாலும் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். செய்யக்கூடிய வேலையில் எடுக்கக்கூடிய சின்ன சின்ன முயற்சிகளும் தோல்வி அடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எப்படியாவது கஷ்டப்பட்டு வியாபாரத்தை முன்னுக்குக் கொண்டு வர புதிய யுத்திகளை அறிமுகம் செய்வீர்கள். சிரமங்களை எதிர்கொண்டு தான், இந்த நாளை ஜெயிக்க முடியும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். இன்று நீங்கள் ஏதாவது ஒரு வேலையை செய்யும் போது, சின்ன சின்ன தடைகள் தடங்கல்கள் வரும். அதை கண்டு துவண்டு போகக் கூடாது. பிரச்சினைகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள். பிரச்சனைகள் உங்களைப் பார்த்து நிச்சயம் பின்வாங்கும். கடவுளின் ஆசிர்வாதம் உங்களுக்கு இருக்கிறது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருங்கள். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்கவும்.



மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளோடு நல்லுறவு இருக்கும். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகையால் சந்தோஷம் இரட்டிப்பாகும். பிரிந்த கணவன் மனைவி சேர்வது, நீண்ட நாட்களாக பிரிந்த உறவுகள் ஒன்று கூடுவது போன்ற நல்ல நிகழ்ச்சிகள் குடும்பத்தில் நடக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை தொழில் இவைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அலட்சியப் போக்கு வேண்டாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத வரவு மன நிம்மதியை கொடுக்கும். செலவுக்கு பணம் இல்லையே என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். ஏதாவது ஒரு ரூபத்தில் மகாலட்சுமி உங்கள் கையை தேடி வருவாள். சிக்கனமாக செலவு பண்ணுங்கள். மகாலட்சுமியின் கடாட்சம் உங்களுக்கு பரிபூரணமாக இருக்கிறது. இன்று மாலை கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் மன நிம்மதி பெறுவீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். கவனக்குறைவாக ஒரு வேலையை செய்யாதீர்கள். கவனக்குறைவாக செய்யக் கூடிய வேலையின் மூலம் பல பிரச்சனைகள் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது வீட்டில் முன்கோபடக் கூடாது. பிள்ளைகளை கைநீட்டி அடிக்க கூடாது. எந்த பிரச்சனையையும் இன்று பொறுமையாக கையாண்டால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் தீரக்கூடிய நாளாக இருக்கும். மன அமைதி கிடைக்கும். வேலையில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நாளைக்கு தேவையான வேலையை கூட இன்றே செய்து முடித்துக் கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டு கிடக்கும். தொழிலில் கொஞ்சம் பொறுமை தேவை. அவசரமாக இன்றே பணக்காரராகி விட வேண்டும் என்று எந்த முடிவையும் எடுக்கக்கூடாது. முன்பின் தெரியாத நட்பில் இருந்து விலகி விடுங்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் சுயநலத்தோடு செயல்படுவீர்கள். அடுத்தவர்களிடம் தலைகுனிந்து நிற்க மாட்டீர்கள். எதுவாக இருந்தாலும் அடம்பிடித்து சாதிக்கக் கூடிய குணம் வெளிப்படும். இதனால் புதிய எதிரிகள் உண்டாகலாம். கூடுமானவரை குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல பழகவும். யாரிடம் அதிகம் போட்டி போடாதீங்க. அது இன்று உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கும் ஜாக்கிரதை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பெரிய அளவில் நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் பிரமோஷன் கிடைக்கும். சம்பள உயர்வு கிடைக்கும். புதுசாக சொத்து சுகம் நகை வாங்கக் கூடிய யோகமும் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். கணவரின் அனுசரணை அன்பு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் சந்தோஷமாக இருப்பதை பார்த்தால், கூட இருப்பவர்களுக்கு நிச்சயம் பொறுக்காது. பிரச்சனைகளை இழுத்து விடுவார்கள். குடும்ப சந்தோஷ விஷயங்களை வெளியில் சொல்லாதீங்க. வருமானத்தை வெளியில் சொல்லாதீங்க. ஒரு புது புடவை வாங்கினால் கூட அடுத்தவர்களுக்கு காட்டாதீங்க. அது உங்களுக்கு நஷ்டமாக வாய்ப்பு இருக்கிறது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத வகையில் பண வரவு பொருள் வரவு இருக்கும். சோம்பேறித்தனம் இருக்காது. உங்களுடைய வேலைகளை சொன்ன நேரத்திற்கு முடித்துக் கொடுத்து விடுவீர்கள். இந்த நாளில் டென்ஷன் குறையும். மன நிம்மதி இருக்கும் இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று அகல கால் வைக்கக் கூடாது. பொருளாதாரத்தில் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. பண இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எதுவாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். கையில் இருக்கும் பணத்தை கொடுத்து பெரிய அளவில் எந்த பொருளையும் வாங்காதீங்க. ஏமாற வாய்ப்புகள் இருக்கிறது. அடுத்தவர்கள் பேச்சை கண்மூடித்தனமாக நம்பவே கூடாது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று தொலைதூர பயணம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கும். அந்த பயணத்தின் மூலம் நிச்சயம் நல்லது நடக்கும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். டார்கெட்டை முடிக்க கூடிய வேலைகளில் ஈடுபடுவீர்கள். சோம்பேறித்தனம் இருக்காது. உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருட்களை நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள். ஆரோக்கியத்தில் அலட்சியம் வேண்டாம்.
SHARE