Friday 26 July 2024

இன்றைய ராசிபலன் - 26.07.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சுறுசுறுப்பு இருக்காது. சின்ன சின்ன பின்னடைவுகள் வரும்போது, சின்ன சின்ன தோல்விகளும் வரலாம். தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தவும். குடும்பத்தில் இருப்பவர்களோடு அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை மனைவியிடமும் பிள்ளையிடமும் காட்ட வேண்டாம். இன்றைய தினம் கொஞ்சம் சிரமங்கள் நிறைந்த தினமாகத்தான் இருக்கும். அனுசரித்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கையில் இருக்கும் இருப்பு குறையும். சேமிப்பை செலவு செய்து விட்டு பின்பு வருத்தப்படுவீர்கள். வேலையிலும் தொழிலிலும் பெருசாக எந்த பிரச்சனையும் இருக்காது. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம். பெரியவர்களின் சொல்பேச்சு கேட்காமல் எடுக்க முடிவுகள் தவறாக இருக்கும். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்காதிங்க.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் சாதனையாளர்களாக மாறுவீர்கள். வெற்றி வாகை சூடுவீர்கள். நினைத்த காரியத்தை சரியான நேரத்தில் நடத்தி முடிப்பீர்கள். வேலையில் சம்பள உயர்வு பதவி உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும்.

கடகம்

கடக ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருந்து உங்களுடைய வேலையை சாதித்துக் கொள்வீர்கள். ரொம்பவும் சூட்சமத்தோடு செயல்படுவீர்கள். எதிரிகளை சுலபமாக வீழ்த்தி விடுவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான நல்ல விஷயங்களை முன்கூட்டியே உஷாராக செய்வீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். இறையருள் கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று உடல் சோர்வு ஏற்படும். வேலை அதிகமாக இருக்கும். நிறைய தண்ணீர் குடிக்கவும். உடலை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளவும். மற்றபடி வேலை தொழில் எல்லாம் சமூகமாக செல்லும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். காதல் கைகூடும். திருமண பேச்சு வரை செல்லும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். முதலீட்டில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். முன்பின் தெரியாத நபரிடம் முக்கியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். வாராக்கடன் வசூல் ஆகும். தொழிலில் எதிர்பாராத வெற்றியை அடைவீர்கள். இழுந்த பணத்தை எல்லாம் மீட்டு எடுத்து விடுவீர்கள். தங்கநகை வாங்குவதற்கான யோகமும் இருக்கிறது. வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் தொடங்கும். சுப செலவுகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம் பாத்துக்கோங்க.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். அன்றாட வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் பார்த்துக் கொள்ளவும். சரியான தூக்கமும் சரியான சாப்பாடு இன்று உங்களுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும். முன்பின் தெரியாத நபரிடம் அதிகமாக பேச வேண்டாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சௌகர்யமான நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தது எல்லாம் நடக்கும். உங்கள் குறிக்கோளை அடைவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். வேலை செய்பவர்கள் உங்கள் சொல்பேச்சு கேட்காமல் வாக்குவாதத்தில் ஈடுபடலாம். பொறுமையாக எல்லா விஷயங்களையும் சரி கட்டிக் கொள்ளுங்கள். முன் கோபப்படாதீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத இன்பம் வந்து மன மகிழ்ச்சியை கொடுக்கும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நீண்ட நாட்களாக உங்களை தொடர்ந்து வரும் பிரச்சனை உங்களை விட்டு விலகி விடும். கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். கலைஞர்களுக்கும் இன்று முன்னேற்றம் நிறைந்த நாள் தான்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். மனதில் இருந்த பாரத்தை எல்லாம் இறக்கி வைத்தது போல ஒரு உணர்வு ஏற்படும். இறைவனின் ஆசிர்வாதம் கிடைக்கும். கடன் சுமை குறையும். நிதிநிலைமை சீராகும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். கணவன் மனைவி கூடுதல் அன்பை வெளிப்படுத்துவீர்கள். சந்தோஷம் மனதில் நிறைவாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலைகளை சரியாக முடிக்க பிளான் செய்ய வேண்டும். இல்லை என்றால் பிரச்சனைகளில் சிக்கி கொள்வீர்கள். மேலதிகாரிகளிடம் பொய் சொல்லி தப்பிக்க பார்க்காதீர்கள். நேர்மையுடன் நடந்து கொண்டால் நல்லது. பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும். எதிராளிகளை குறைவாக எடை போடாதீர்கள். பகைவருக்கு பலம் அதிகம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.
SHARE