Tuesday 23 July 2024

இன்றைய ராசிபலன் - 23.07.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ரொம்ப ரொம்ப அமைதியான நிலையில் இருக்கும். ஆன்மீகத்தில் உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள். குடும்பத்தோடு கோவில் குளங்களுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. வேலைக்கு செல்பவர்கள் இன்று தாமதமாக எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. எந்த வேலையாக இருந்தாலும் அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தொடங்கவும். தொழிலில் நல்ல லாபம் இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகள் வாக்குவாதங்கள் வந்தாலும், உங்களை நீங்கள் அமைதியாக வைத்துக்கொள்ள, விட்டுக் கொடுத்து செல்வீர்கள். எதிலும் போட்டி போட்டுக் கொண்டு நிற்க மாட்டீர்கள். உங்களுடைய எண்ணம் எல்லாம் வாழ்க்கையில் எப்படி ஜெயிப்பது, இலக்குகளை எப்படி அடைவது என்பதில் மட்டும் தான் இருக்கும். நிச்சயம் உங்களுடைய நம்பிக்கை இன்று வீண் போகாது.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமான நிலை இருக்கும். குழப்பமான நிலை இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாக எதுவுமே நடக்காது. இந்த வேலையில் நாம் நிலையாக இருப்போமா, முன்னேற்றத்தை அடைவோமா, என்ற பல கேள்விகள் உங்களுக்குள் வரும். நிதானமாக இருங்கள். நிச்சயமாக உங்களுக்கு நல்லது நடக்கும். கடின உழைப்பை மட்டும் முதலீடாக போடுங்கள். கடவுள் உங்கள் பக்கம். மற்றபடி எந்த குழப்பத்திற்கும் இன்று இடம் கொடுக்க வேண்டாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பாசிடிவ் எனர்ஜி அதிகமாக இருக்கும். எவ்வளவோ பிரச்சனைகள் உங்களை நோக்கி வரும். இது முடியும், இது முடியாது என்பதை அலசி ஆராய்ந்து தீர்மானம் செய்வீர்கள். மனதை ஒரு நிலையாக வைத்துக் கொள்வீர்கள். எந்த ஒரு கெட்ட எண்ணத்திலும், மனதை சிதற விட மாட்டீர்கள். இதனாலேயே உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சந்தோஷம் பிறக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் அதிக ஆர்வம் ஏற்படும். எதிர்காலத்திற்கு தேவையான நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். கணவன் மனைவி பிரச்சனை தீரும். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும். சுப செலவுகள் உண்டாகும். ஆரோகத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று லேசான பதட்டம் இருக்கும். எந்த ஒரு முயற்சிகளை மேற்கொண்டாலும் அதில் நாம் தோற்றுவிடுவோமோ என்ற நெகட்டிவ் எண்ணங்கள் உருவாகிக் கொண்டே இருக்கும். இதனால் குழப்பங்கள் நிலவும். புதிய முயற்சிகளை இன்று மேற்கொள்ள வேண்டாம். உங்களுடைய அன்றாட வேலையில் கவனம் செலுத்தினால் போதும். குல தெய்வத்தின் மீது பாரத்தை போட்டு வேலையை தொடங்கவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமாகவே எல்லாம் நடக்கும். மேலதிகாரிகளின் அனுசரணை கிடக்கும். சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. ரொம்ப நாள் கிடப்பில் போட்டு வைத்திருந்த வேலையை இன்று கையில் எடுங்கள் சுலபமாக முடியும். இந்த நாள் முழுக்க முழுக்க உங்களுக்கான நாள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படும். எந்த ஒரு விஷயத்தையும் கஷ்டமே இல்லாமல் சுலபமாக செய்து விடுவீர்கள். அடுத்தவர்கள் வியந்து பார்க்கும் அளவுக்கு உங்களுடைய முன்னேற்றம் இருக்கும். எதிரிகளின் சூழ்ச்சியை வீழ்த்துவீர்கள். வாழ்க்கையில் சந்தோஷம் என்றால் என்ன என்பதை முழுசாக உணரக்கூடிய நாள் இன்று.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தொலைநோக்கு பார்வை அதிகமாக இருக்கும். தூரத்திலிருந்து இவன் நமக்கு நல்லது செய்வானா, கெட்டது செய்வானா, என்பதை யூகித்து விடுவீர்கள். இதனாலேயே வரக்கூடிய பிரச்சினைகளிலிருந்து சுலபமாக தப்பித்துக் கொள்வீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பிரச்சனைகளை சாதுரியமாக சரி செய்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும் நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று எதிரிகள் தொல்லை கொஞ்சம் அதிகமாக இருக்கும். உங்களுடைய வேலையை சரியாக செய்யவே விடமாட்டார்கள். இதனாலேயே நீங்க அனாவசியமா திட்டு வாங்குவீங்க. குறிப்பாக நெருங்கிய நண்பர்கள், நெருங்கிய உறவுகளை நம்பி எதையும் செய்யாதீங்க. எந்த ஒரு விஷயத்தையும் வெளியில் சொல்லாதீங்க. உங்களுக்கு நல்லது நடப்பதாக இருந்தால், அந்த நல்லது நடந்து முடியும் வரை அதை ரகசியமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். இது அடுத்தவர்களுக்கு செய்யும் துரோகம் அல்ல உங்களுக்கு நீங்கள் செய்து கொள்ளும் நல்லது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகளை சரி செய்து விடுவீர்கள். கிடப்பில் கடந்த வேலையை எல்லாம் எடுத்து சுறுசுறுப்பாக தூசி தட்டி செய்து விடுவீர்கள். நல்ல பெயர் கிடைக்கும். முதலீட்டில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். யாரை நம்பியும் கடன் கொடுக்காதீங்க ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கௌரவம் பார்க்கக்கூடிய நாளாக இருக்கும். எல்லோரிடமும் பிரஸ்டீஜ் பார்த்துக்கொண்டு சொல்ல வேண்டிய விஷயத்தை சரியாக சொல்லவும் முடியாமல், சொல்லாமல் இருக்கவும் முடியாமல் திணறுவீர்கள். எந்த இடத்தில் கவுரவம் பார்க்க வேண்டுமோ, அந்த இடத்தில் மட்டும் தான் பார்க்க வேண்டும். வாயை திறந்து பேசக்கூடிய இடத்தில் பேசினால் தான் உங்களுக்கான நல்லது இன்று நடக்கும். காலில் விழுந்தால் இந்த நல்லது கிடைக்குமா, யோசிக்காமல் காலில் விழுந்துடுங்க. இன்று நீங்கள் ராஜா தான். வேறு வழி இல்லை.
SHARE