Monday 8 July 2024

இன்றைய ராசிபலன் - 08.07.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைகள் விலகும். தொல்லை கொடுத்து வந்த நட்பு உறவுகளும் தானாக உங்களை விட்டு விலகும். வாரத் தொடக்கத்திலேயே நிறைய நன்மைகள் நடக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகளை தொடங்குவதற்கு உண்டான பேச்சுகள் ஆரம்பிக்கும். மனசு லேசாகும். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். சிரமத்தோடு தான் இன்றைய நாள் நகர்ந்து செல்லும். இருந்தாலும் இந்த நாள் இறுதியில் எல்லா வேலையையும் சரியாக முடித்த திருப்தியும் கிடைக்கும். உழைப்புக்கேற்ற பலன் பெறுவீர்கள். மன நிம்மதி அடைவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும்.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். அலுவலக வேலைகள் எல்லாம் சுலபமாக முடியும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். கடன் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். முதலில் கவனமாக இருக்க வேண்டும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். எந்த முக்கியமான முடிவாக இருந்தாலும் பெரியவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். உங்களை புரிந்து கொள்ளாத கணவர் புரிந்து கொள்வார். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சனை நீங்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் இன்று நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாள் பிரச்சனையிலிருந்து விடுபடுவீர்கள். சுறுசுறுப்போடு உங்களுடைய வேலையை செய்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். காதல் கைகூடும் திருமணம் வரை செல்லும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத உதவி கிடைத்ததன் மூலம் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் பெருகும். கடன் தொல்லை குறையும். வீட்டில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல செய்தி வந்து சேரும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் வரும். ஆனாலும் நீங்கள் நேர்மை தவறாமல் நடந்து கொள்வீர்கள். உங்களிடம் இருக்கும் இந்த குணம் உங்களை பிரச்சனையிலிருந்து காப்பாற்றி விடும். நாலு பேருக்கு உதாரணமாக திகழ்வீர்கள். உங்களைப் பார்த்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று உடன் இருப்பவர்கள் கற்றுக் கொள்வார்கள். இந்த நாள் இனிய நாளாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஆழ்ந்த சிந்தனை இருக்கும். எந்த வேலையை செய்தாலும் பொறுப்போடு செய்வீர்கள். ஆனால் யோசித்து யோசித்து அதிக நேரத்தை வீணடிப்பீர்கள். எந்த வேலையாக இருந்தாலும் கடவுளின் மீது பாரத்தை போட்டு சுறுசுறுப்பாக தொடங்குங்கள். அதிக நேரம் சிந்திக்கும்போது நமக்கே தேவையில்லாத மனக்குழப்பம் வரும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுடைய திறமை வளரும். வாழ்க்கையில் முன்னேற மேலும் மேலும் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் அடைய வங்கிக் கடன் கிடைக்கும். புதிய ஐடியாக்களை அறிமுகப்படுத்தி தொழிலையும் விரிவுபடுத்தலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் செய்த வேலைக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். உயர்ந்த பதவிகள் கிடைக்கும். நான்கு நல்ல மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனைவி ஏதாவது சண்டை போட்டால் கணவர் தலையை ஆட்டிக் கொள்ளுங்கள். கணவர் சண்டை போட்டால் மனைவி தலையை ஆட்டிக் கொள்ளுங்கள். வாக்குவாதம் செய்யாதீங்க.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் வெற்றி தான். நீங்கள் நினைத்தபடி எல்லா வேலையும் சரியாக நடக்கும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தை பிரிய வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று சாந்தமாக எல்லா விஷயத்தையும் சிந்தித்து செயல்படுவீர்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்வீர்கள். வாழ்க்கையில் பக்குவமாக இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்ற ஒரு முடிவுக்கு வருவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மனைவியின் ஆதரவு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் பிரஷர் இருக்கும். வேறு வழி கிடையாது. பாரத்தை தாங்கணும். இருக்கிற வேலையை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.
SHARE