Monday, 24 June 2024

யாழில். காய்ச்சலுக்கு மருந்தெடுத்த பெண்மணி உயிரிழப்பு..!!!

SHARE


காய்ச்சலுக்கு மருந்து எடுத்து , மருந்தை உட்கொண்ட பெண்மணி உயிரிழந்துள்ளார்

யாழ்ப்பாணம் , சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய விஜயகுமார் குணராணி என்றே பெண்ணே உயிரிழந்துள்ளார்

குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அதற்காக 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று , மருந்தினை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார்.

மருந்தினை உட்கொண்ட பின்னர், மறுநாள் 23ஆம் திகதியான நேற்றைய தினம் உடல் நிலை மிக மோசமாகி மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில் , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
SHARE