யாழில் எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு..!!!
யாழ்ப்பாணத்தில் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து வியாழக்கிழமை(27.06.2024) முற்றாக எரிந்த நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
உடுவில் தெற்கு பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள வெற்றுக் காணி ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்த நிலையில் காணப்படுவதாக , சுன்னாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிளின் இலக்க தகடு என நம்பப்படும் இலக்க தகடு ஒன்று காணியின் பிறிதொரு இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இலக்க தகட்டின் அடிப்படையில் , உரிமையாளரை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கடந்த வாரம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நள்ளிரவு வேளை வீதியில் வைத்து சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.