யாழில் வீடொன்றில் வீசிய துர்நாற்றம்; அநாதரவாக உயிரிழந்த தாய்..!!!
யாழ்ப்பாணம் வடமராட்சி, திக்கம் பகுதியில் சில நாட்களின் முன் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் உருக்குலைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
75 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் மகள் வெளிநாடு சென்ற நிலையில் மகள் வெளிநாடு சென்றது தாயாருக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகின்றது.
வெளிநாட்டிலுள்ள மகள் பற்றிய தகவல் இல்லாத நிலையில், அது குறித்து விசாரிப்பதற்காக கடந்த 14ஆம் திகதி கொழும்பில் உள்ள தூதரகமொன்றுக்கு சென்ற தாயார் மகள் தொடர்பில் விசாரித்து விட்டு, 15ஆம் திகதி அதிகாலையில் வீடு திரும்பியுள்ளார்.
தனது வீடு திரும்பிய பெண்மணியின் சடலம் குளியலறை வாசலில் மீட்க்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், குளியலறைக்கு சென்ற போது விழுந்து உயிரிழந்திருக்கலாமென கருதப்படுகிறது.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அயலவர்கள் கிராம சேவகருக்கு அறிவித்ததை தொடர்ந்து, பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டது. பருத்தித்துறை பொலிசார் வீட்டுக்கு சென்றபோது, சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்பட்டது.
அவரது பயணப்பொதியில் இருந்த பணம் உள்ளிட்ட பொருட்கள் அப்படியே இருந்தன. இந்நிலையில் பெண்னின் மரணத்தில் குற்றச்சம்பவம் இல்லையென கருதும் பொலிஸார், மேலதிக விசாரணைகளி முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.