Friday, 28 June 2024

யாழ். மருதனார் மடத்தில் உணவகத்திற்கு சீல்..!!!

SHARE


யாழ்ப்பாணம் மருதனார் மட பகுதியில் இயங்கி வந்த உணவகம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் , உரிமையாளருக்கு 54ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை வெதுப்பக உரிமையாளரை கடுமையாக எச்சரித்த மன்று , அவருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது.

சுன்னாகம் , மருதனார் மடம் மற்றும் இணுவில் பகுதிகளில் உள்ள உணவு கையாளும் நிலையங்களில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது உணவகம் ஒன்றும் வெதுப்பகம் ஒன்றும் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்தமை கண்டறியப்பட்டு , அவற்றின் உரிமையாளர்களுக்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.


குறித்த வழக்கு நேற்றைய தினம் வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது உரிமையாளர்கள் இருவரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களை கடுமையாக எச்சரித்து, வெதுப்பக உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று , உணவக உரிமையாளருக்கு 54ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்ததுடன் , உணவகத்தில் உள்ள குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறு உத்தரவிட்டது.
SHARE