யாழில்.பனைமரம் முறிந்து விழுந்து சிறுவன் காயம்..!!!
யாழ்ப்பாணத்தில் திடீரென வீசிய கடும் காற்று காரணமாக குடிசை ஒன்றின் மீது பனை மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் ஒருவன் காயங்களுக்கு உள்ளாகியுள்ளான்.
காரைநகர் களபூமி பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை மினி சூறாவளி வீசியதில் , குடிசை ஒன்றின் மீது பனை மரம் முறிந்து விழுந்துள்ளது.
அதன் போது குடிசையில் இருந்த சிறுவன் காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
குறித்த குடிசை வீட்டில் நால்வர் கொண்ட குடும்பம் வசித்து வந்ததாகவும் , குடிசை மீது பனை மரம் முறிந்து விழுந்ததால் , அவர்கள் தங்குவது வீடின்றி இன்னல்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.