Tuesday, 25 June 2024

யாழில். சுகாதார சீர்கேட்டுடன் வெதுப்பகங்கள்: வெதுப்பகம் ஒன்றுக்கு சீல்..!!!

SHARE

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் மற்றுமொரு வெதுப்பகத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படும் 09 வெதுப்பகங்கள் கடந்த 12ஆம் திகதி இரவு திடீர் சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.


அவற்றில் 02 வெதுப்பகங்கள் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்ததை கண்டறிந்து அவற்றுக்கு எதிராக யாழ்.நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

குறித்த வழக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய வெதுப்பகம் ஒன்றிற்கு சீல் வைக்குமாறும் , மற்றைய வெதுப்பக்கத்தில் காணப்படும் குறைபாடுகளை உடன் நிவர்த்தி செய்யுமாறும் உத்தரவிட்ட மன்று உரிமையாளர்கள் இருவரையும் தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்த மன்று , வழக்கினை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
SHARE