Saturday, 1 June 2024

யாழில் கணவன் - மனைவி மீது தாக்குதல்: நகைகள், பணம் என்பவை கொள்ளை..!!!

SHARE

வியாபார நடவடிக்கைகளை முடித்து விட்டு வீடு திரும்பிய வர்த்தகரை , வீட்டிற்கு அருகில் வைத்து தாக்கி ஒரு தொகை பணத்தை கொள்ளையிட்டதுடன் , வர்த்தகரின் மனைவியை தாக்கி அவரது நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்

யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற இச் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு என்பவரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்

குறித்த நபர் தனது வியாபாரங்களை முடித்துக்கொண்டு , வீடு திரும்பிய வேளை வீட்டிற்கு அருகில் மறைந்திருந்த கொள்ளை கும்பல் அவர் மீது தாக்குதலை மேற்கொண்டு அவரது வியாபார பணத்தினை கொள்ளையடித்துள்ளது.


சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே ஓடி வந்த வர்த்தகரின் மனைவி மீதும் கொள்ளை கும்பல் தாக்குதல் நடாத்தி அவரது நகைகளையும் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளது

தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்னர்.
SHARE