யாழில். ஆலயமொன்றில் 64 பவுண் தங்கநகைகள், 8 இலட்சம் ரூபாய் பணம் திருட்டு..!!!
யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இருந்து 64 பவுண் தங்கநகைகள் மற்றும் சுமார் 08 இலட்ச ரூபாய் ரொக்க பணம் என்பவை திருடப்பட்டுள்ளது.
ஊர்காவற்துறை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில்லையே இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றது.
ஆலயத்தினுள் பாதுகாப்பாக பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணமே திருட்டு போயுள்ளது. போலி திறப்புக்களை பயன்படுத்தி பூட்டை திறந்து நகைகள் பணம் திருடப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.