இன்றைய ராசிபலன் - 27.06.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையாக நின்று சாதிக்க வேண்டும் என்று உறுதியோடு இருப்பீர்கள். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். தொழிலில் எதிர்பார்த்ததை விட அதிக இலாபம் கிடைக்கும். இந்த நாள் இறுதியில் மன நிம்மதியோடு நல்ல தூக்கமும் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுக்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சிக்கலான விஷயங்களை கூட சுலபமாக தீர்த்து விடுவீர்கள். அறிவாற்றல் இரட்டிப்பாகும். தொழிலில் வரக்கூடிய சிக்கல்களை சுலபமாக சரி செய்து விடுவீர்கள். உங்களுடைய பிரச்சனைகளை நீங்களே தீர்த்து வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல், அடுத்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல மேம்பாடு இருக்கும். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய குணம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் சரி, தொழிலிலும் சரி, உறவினர்களோடும் சரி, அடுத்தவர்களுடைய பிரச்சனையை உங்கள் பிரச்சினையாக நினைத்துக் கொண்டு ஆலோசனை வழங்குவீர்கள். உங்களால் முடிந்த அளவு பிரச்சனைக்கு உண்டான தீர்வையும் காட்டிக் கொடுத்தீர்கள். உங்கள் குழந்தைகளுடைய எதிர்காலத்தை பற்றி நிறைய சிந்திப்பீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பு சம்பந்தப்பட்ட செயல்பாடுகளையும் இன்று துவங்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமம் நிறைந்த நாளாக இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சிக்கிக் கொள்வீர்கள். அதிகமாக பேசாதீர்கள். பேச்சை குறைத்தால் இன்றைய நாளை சமாளித்துக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பொறுப்புகள் அதிகமாக இருக்கும். கூடுதல் கவனம் எடுத்து செயல்படுங்கள். தொழிலில் சீரான போக்கே நிலவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் அதிக ஆர்வம் எடுத்து செயல்படுவீர்கள். தொழிலில் இருந்து வந்த எதிரிகளை எல்லாம் விழ்த்தி விடுவீர்கள். எதிரிகளால் இன்று தொல்லை இருக்காது. மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். தேவையற்ற நண்பர்களோடு பழகாதீங்க. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாள் தொல்லை கொடுத்து வந்த பிரச்சனைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுக்கவும். உங்களுடைய குடும்பப் பிரச்சனையை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் நல்ல லாபம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன மோதல்கள் வரும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் நல்லது. முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். நீண்ட தூர பயணத்தின் போது ஜாக்கிரதையாக இருங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக் காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. வேலை செய்யும் இடத்தில் உஷாராக இருக்கவும். புது நண்பர்கள், புதுசாக வேலைக்கு வருபவர்களை முழுசாக நம்பி எந்த ரகசியத்தையும் உளறி வைக்காதீங்க. நாவடக்கம் தேவை. தொழிலில் கண்மூடித்தனமாக யாரையும் நம்ப கூடாது ஜாக்கிரதை.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு அலைச்சலும் இருக்காது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை இல்லை. அடுத்தவர்களுடைய விஷயத்தில் தலையிட்டால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். மேலதிகாரிகளுடன் பணிவாக பேசவும். வார்த்தைகளில் கவனம் இருக்கட்டும். பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்கவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பாராட்டும் புகழும் உங்களைத் தேடி வரும். எதிரிகளை வீழ்த்துவதில் திறமையாக செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய நட்பு நல்லதை செய்யும். உங்களுடைய உடைமைகளை மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். சில பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். நேர்மையாக பேசுவீர்கள். குறுக்கு வழியில் செல்ல மாட்டீர்கள். இதனாலேயே சில எதிரிகள் புதுசாக உருவாக வாய்ப்பு உள்ளது. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம். வாக்குவாதம் செய்யாதீர்கள். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருக்கப் போகிறீர்கள். உங்களுடைய பாசம் வெளிப்படும். எதிர்கள் கூட நண்பர்களாக மாறிவிடுவார்கள். நீண்ட நாள் பகை ஒரு முடிவுக்கு வரும். கோட் கேஸ் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் மட்டும்தான் அதை சரி செய்ய முடியும்.