Tuesday, 25 June 2024

இன்றைய ராசிபலன் - 25.06.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சோம்பேறித்தனம் நீங்கும். கொடுத்த வேலையை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுத்து விடுவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சின்ன சின்ன பெட்டி கடை வைத்திருப்பவர்கள் கூட உங்களுடைய தொழிலை முன்னேற்ற அயராது பாடுபடுவீர்கள். கை நிறைய சம்பாதிப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு கிடைக்கும் நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமையாக செயல்படுவீர்கள். நாலு பேர் சேர்ந்து முடிக்க முடியாத வேலையை நீங்கள் ஒருவரே டக்குனு முடிச்சிருவீங்க. அந்த அளவுக்கு இன்று உங்களுக்கு யோகம் காத்துக் கொண்டிருக்கிறது. தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகளை எல்லாம் சுலபமாக சரி செய்து விடுவீர்கள். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும் சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும்.


மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. எந்த ஒரு விஷயத்தையும் அலட்சியமாக நினைக்கக் கூடாது. வேலையில் கூடுதல் அக்கறை தேவை. தொழிலில் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட பெரிய அளவில் நஷ்டத்தை உண்டு பண்ணலாம். ஏதாவது ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்தியுங்கள். அனுபவசாலிகளிடம் ஆலோசனையே பெறுங்கள். அடம்பிடித்து எந்த ஒரு வேலையும் செய்யாதீங்க.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டு பரிசு கிடைக்க கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு ப்ரோமோஷன் இடமாற்றம் வரவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். தொழிலில் மூன்றாவது நபரை முழுசாக நம்பாதீங்க. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முன்பின் தெரியாதவர்களுக்கு கடன் கொடுக்கும் பழக்கத்தை நிறுத்துவது நல்லது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். செலவை கட்டுப்படுத்துவதற்கு உண்டான வழிகளை பாருங்கள். வீட்டில் சின்ன சின்ன சண்டைகள் வரும். வாக்குவாதத்தை பெருசாக்க கூடாது. கணவன் மனைவி யாராவது விட்டுக் கொடுப்பது நல்லது. குழந்தைகளுடைய படிப்பில் பெற்றவர்கள் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக நடந்து கொள்வீர்கள். எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட மாட்டீர்கள். எதிரிகள் உங்களோடு சண்டை போடுவதற்கு தயாராக இருந்தாலும் நீங்கள் ஒரு படி பின்னுக்கு செல்வீர்கள். விட்டுக் கொடுத்த நீங்கள் என்றுமே கெட்டுப் போக போவது கிடையாது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். உடம்புக்கு அதிகம் சூடு தரும் பொருட்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். வேலையாக இருக்கட்டும் செய்யும் தொழிலாக இருக்கட்டும் உங்களின் திறமை முழுமையாக வெளிப்படும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவும். பொருட்கள் திருடு போவதற்கு வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருக்கும். கஷ்டப்படுபவர்களை தேடி போய் உதவி செய்வீர்கள். சில பேர் தான தர்ம காரியத்தில் ஈடுபடுவீர்கள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். மற்றபடி வேலை, தொழில் எல்லாவற்றிலும் இன்று முன்னேற்றமான போக்கை காணப்படும். ஆரோக்கியத்தில் சின்ன சின்ன இடர்பாடுகள் வரலாம். வீட்டில் முதியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டவும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியை கொடுக்கும். கொஞ்சம் சோர்ந்து போய் அமர்ந்தாலும் வேலை பளு அதிகமாகிவிடும் பார்த்துக்கோங்க. தினம் தினம் செய்ய வேண்டிய வேலையை தினம் தினம் செய்தால் தான் நல்லது. வேலை சுமையை சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டாம். வார இறுதியில் பிறகு உங்களுக்கு தான் கஷ்டம்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் இன்று எடுத்த முடிவு உறுதியாக இருப்பீர்கள். பின்வாங்க மாட்டீர்கள். சவால்களில் ஜெயிப்பீர்கள். எதிரிகள் தான் உங்களை பார்த்து பயப்பட வேண்டும். போட்டி போட்ட எதிரிகளை எல்லாம் துவம்சம் செய்யக்கூடிய அளவுக்கு உங்களுடைய போக்கு இருக்கும். மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்ட வேண்டும். தேவையற்ற பழக்க வழக்கங்களை விட்டு விடவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இன்று ஆன்மீகத்தில் ஈடுபடுவீர்கள். வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். கலைத்துறையினருக்கும் இன்று நல்லது நடக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்க.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன தடங்களை தாண்டிய பின்னரே வெற்றி அடைவீர்கள். ஆகவே ஒரு முறை தோல்வி வரும்போது துவண்டு போகக்கூடாது. இன்று விடாமுயற்சியோடு நடந்து கொள்ள வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. அதிகமாக பேசாதீங்க. குறைவாக பேசி அதிகமாக வேலை செய்வது உங்களுடைய மதிப்பும் மரியாதையையும் உயர்த்தி தரும்.
SHARE