வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் 2 மாத குழந்தை உயிரிழப்பு..!!!
ஓமந்தை - புதியவேலர் - சின்னக்குளம் பகுதியில் தற்காலிக வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாத குழந்தை உயிரிழந்துள்ளது.
சுவர் இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த குழந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று(09) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குழந்தை உயிரிழந்தமை தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.