இன்றைய ராசிபலன் - 14.06.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். எல்லா வேலையையும் பொறுப்போடு செய்து முடிப்பீர்கள். குடும்பத்தோடு நிறைய நேரத்தை செலவு செய்வீர்கள். மனம் மகிழ்ச்சியாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரிய பேச்சுகள் மீண்டும் நடக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல ஓய்வு இருக்கும். மாமியார் மருமகள் உறவில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் தீரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு பெருசாக இன்று எந்த பிரச்சனையும் இருக்காது. எல்லா வேலையும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே முடிந்துவிடும். வாகனத்தில் செல்லும்போது கொஞ்சம் கவனத்தோடு இருக்கவும். மேலதிகாரிகளிடம் பேசும் போதும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதிர்த்து பேச வேண்டாம். முன்கோபட வேண்டாம். உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் இன்று கூடுதல் நன்மையை பெறுவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு ஒரு ஊக்கத்தை கொடுக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன குழப்பங்கள் இருக்கும். சில விஷயங்களை செய்யலாமா வேண்டாமா என்று சிந்தித்து தலைவலி வந்துவிடும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். எல்லாவற்றிற்கும் முடிவை அந்த கடவுள் காண்பித்துக் கொடுப்பான். உங்களுடைய வேலையை மட்டும் கவனத்தோடு செய்தால் போதும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் இன்று டென்ஷன் ஆக கூடாது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தேவைக்கு அதிகமாக வருமானம் இருக்கும். சேமிப்பை உயர்த்துவீர்கள். தொழிலில் முதலீடு செய்யலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். அடுத்தவர்களுக்கு கடன் கொடுப்பதில் மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். பணம் இருக்குது என்பதற்காக அனாவசியமாக செலவு செய்யாதீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வுகளும் கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்ப தலைவிகளுக்கு இன்று வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். பெரியவர்களோடு அனுசரணையாக நடந்து கொண்டால் குடும்பம் சந்தோஷம் அடையும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நற்பலன்கள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வரும். நிதி நிலைமை சீராகும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள். பொன் பொருள் சேர்க்கை இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கலைஞர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பகை உணர்வு ஏற்படும். முன்கோபத்தை குறைக்க வேண்டும். நண்பர்களோடு பழகுவதாக இருந்தால் கூட அளவோடு பழகுங்கள். அளவோடு பேசுங்கள். குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். காதலில் சின்ன சின்ன தகராறுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனதிற்கு பிடித்தவர்களிடம் பொய் சொல்லி நடிக்க வேண்டாம். நிரந்தர பிரிவு உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூடக் கூடிய நாளாக இருக்கும். திறமை வெளிப்படும். நீண்ட நாட்களாக கிடப்பில் போட்ட வேலையை இன்று கையில் எடுத்தால் நிச்சயம் நல்லது நடக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பயணத்தின் போது காதில் ஹெட்போன் அணிய வேண்டாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை நிலவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். முக்கியமான வேலையாக இருந்தால் பேனா பேப்பர் எடுத்து குறித்து வைத்துக் கொள்ளுங்கள். சில முக்கியமான விஷயங்களை மறப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. நேரம் தவறி நாம் செய்யக்கூடிய காரியத்தின் மூலம் எந்த பலனும் இருக்காது பாத்துக்கோங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன தோல்விகள் வருத்தத்தை கொடுக்கும். மனசு கஷ்டப்படும். சின்ன அழுகை கூட வரலாம். கவலைப்படாதீங்க இறைவழிபாடு செய்யும்போது எல்லாம் நல்லதாகவே நடக்கும். முதலீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கட்டும். ரொம்பவும் பாசம் வைத்துள்ளவர்களை பிரிவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது உறவுகளோடு கவனமாக இருக்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். ரொம்பவும் அசதியாக இருப்பீர்கள். எந்த ஒரு வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு லீவு போட்டுவிட்டு, வீட்டில் நன்றாக உறங்கலாம். அரைகுறை தூக்கத்தோடு வண்டி வாகனம் ஓட்ட வேண்டாம். நிதிநிலைமை சீராகும் குடும்பத்தில் சந்தோஷம் பிறக்கும்.