Tuesday, 11 June 2024

இன்றைய ராசிபலன் - 11.06.2024..!!!

SHARE


மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். சந்தோஷமாக உங்களுடைய வேலைகளை எல்லாம் செய்து முடிப்பீர்கள். டென்ஷன் எதுவும் பெருசாக இருக்காது. குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலில் மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியம் வேண்டாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் பொறுப்புகள் இருக்கும். இரண்டு பேர் வேலையை மொத்தமாக நீங்கள் செய்யக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இதனால் உடல் சோர்வு ஏற்படும். தலைவலி வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. நிறைய தண்ணீர் குடிங்க. டென்ஷன் ஆகாமல் ரிலாக்ஸ் ஆக உங்களுடைய வேலையை பார்க்கவும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருப்பவர்களின் அன்பும் அனுசரணையும் உங்களுக்கு கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இன்று ரொம்பவும் பொறுமையாக இருப்பீங்க. எதிலும் அவசரப்பட மாட்டீர்கள். யாராவது சண்டை போட வந்தாலும் அதிலிருந்து விலகிச் செல்ல தான் பார்ப்பீர்களே தவிர எதிரிகளை உருவாக்க மாட்டீர்கள். பக்குவமாக நடந்து கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடைய ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் போதும்.


கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முதலீடுகளை செய்யலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்திலிருந்து பாசிட்டிவான கருத்துக்கள் வரும். மனது சந்தோஷம் அடையும். தேவையற்ற செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். செலவை குறைக்க சிக்கனமாக இருங்கள். ஆடம்பர செலவு வேண்டாம்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீண் செலவுகளை குறைத்து விடுவீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும்‌. இதனால் மனநிறைவு ஏற்படும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். உங்களை பின்னுக்கு தள்ளியவர்களிடம் நேரடியாக மோதி ஜெயிப்பீர்கள். மனது சந்தோஷம் அடையும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷனுக்கு வாய்ப்பு இருக்கிறது. தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். ஆனால் அதை எல்லாம் சமாளிக்க திறமையும் உங்களிடத்தில் இருக்கிறது. கடவுள் உங்கள் பக்கம் இருப்பதால் இன்று எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று ஞாபக மறதி கொஞ்சம் இருக்கும். அவசியமான வேலைகளை கூட மறந்துவிட்டு, வேறு வேலையை பார்த்துக் கொண்டு இருப்பீர்கள். முக்கியமான வேலையில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் இருக்கும். சண்டை சச்சரவுகள் குறைக்க வேண்டும் என்றால் யாராவது ஒருவர் அனுசரித்து செல்லவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று பகை உணர்வு அதிகமாக இருக்கும். யாரையும் நண்பர்களாக பார்க்க மாட்டீங்க. இதனாலேயே சில சிக்கல்களில் சிக்கிக் கொள்வீர்கள். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். துரோகியாக இருந்தாலும் எதிரியாக இருந்தாலும் அவர்களை கொஞ்சம் அனுசரித்து சென்றால் நல்லது. நேரடியாக முட்டி மோதி சண்டை போட வேண்டாம் ஜாக்கிரதை.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருப்பீர்கள். ஆர்ப்பாட்டம் இருக்காது. உங்களுக்கான மரியாதை உங்களைத் தேடி வரும். வேலை செய்யும் இடத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீட்டை செய்யலாம். பார்ட்னர் உங்களுக்கு சாதகமாக இருப்பார். கமிஷன் தொழில் செய்பவர்கள் புதிய வாடிக்கையாளர்களை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் ஜாக்கிரதை ‌

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேற கூடிய நாளாக இருக்கும். புதிய பொன் பொருள் ஆடை சேர்க்க இருக்கும். பெண்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வீட்டில் சுபகாரிய தடை விலகும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் சரி செய்ய புதிய ஐடியாக்கள் கிடைக்கும். பிரச்சனை கிடையாது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை சீராக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். கடன் தொல்லையிலிருந்து வெளி வருவீர்கள். சேமிப்பை உயர்த்துவது நல்லது. வீண் செலவை குறைக்கவும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் விலகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் தடங்கல் நிறைந்த நாளாக தான் இருக்கப்போகின்றது. நிறைய தொல்லைகளை சந்திக்க வேண்டி இருக்கும். எந்த ஒரு வேலையையும் தொட்டவுடன் கச்சிதமாக முடிக்க முடியாது. புதிய முயற்சிகளை இன்று செய்ய வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தேவையற்ற பிரச்சனைகள் உங்களைத் தேடி வர வாய்ப்பு இருக்கு ஜாக்கிரதை.
SHARE