Tuesday, 14 May 2024

ரிஷபத்தில் நிகழும் சூரிய பெயர்ச்சி: இன்று முதல் அடுத்த ஒரு மாதம் இந்த ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது..!!!

SHARE

ஜோதிடத்தைப் பொறுத்தவரை, நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. ஒருவரது ஜாதகத்தில் சூரியன் சுப வீட்டில் இருந்தால், அந்நபர் நல்ல வேலை, மரியாதை, செல்வம் ஆகியவற்றைப் பெறுவார். அதுவே சூரியன் நல்ல நிலையில் இல்லாவிட்டால், அந்நபர் புகழ், வெற்றி மற்றும் எதிலும் நல்ல முடிவுகளைப் பெற முடியாது. இப்படிப்பட்ட சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாவார்.

இந்த சூரியன் இதுவரை மேஷ ராசியில் பயணித்து வந்தார். இந்நிலையில் சூரியன் மே 14 ஆம் தேதி, அதாவது இன்று மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் செல்லவுள்ளார். சூரியன் ரிஷப ராசியில் நுழைவதால், தமிழ் மாதமான வைகாசி மாதம் பிறக்கிறது.


இந்த ரிஷப ராசியில் சூரியன் சுமார் 30 நாட்கள் பயணிக்கவுள்ளார். சுக்கிரனின் ராசியில் சூரியன் பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இப்போது ரிஷபம் சென்றுள்ள சூரியனால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அடுத்த ஒரு மாதம் நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்குகள் மூலம் பணம் சம்பாதிக்க முயற்சிப்பீர்கள். பணியிடத்தில் உங்கள் இலக்குகுளை அடைவீர்கள். மொத்தத்தில் அடுத்த ஒரு மாதம் தொழில் வாழ்க்கை வலுவாக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசியை சேர்ந்த மாணவர்களுக்கு அற்புதமாக இருக்கும். போட்டி தேர்வுகளில் கலந்து கொண்டால் சிறப்பான பலனைப் பெறலாம். உங்களின் இலக்குகளை அடுத்த ஒரு மாதத்தில் அடைவீர்கள். சொந்த தொழில் தொடங்குவதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல செய்தியைப் பெறுவீர்கள்.


மிதுனம்

மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கையில் சில பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள். இது தவிர எதிர் உடன்பிறந்தவர்கள், குறிப்பாக மூத்த சகோதரர்கள் தொடர்பாக சில தவறான புரிதல்களையும் நீங்கள் சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கண் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பீர்கள்.

கடகம்

கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய வேலைகளைத் தொடங்க சாதகமான காலமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீதிமன்ற பிரச்சனைகள் முடிவுக்கு வரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட பதவி உயர்வு கிடைக்கும். மேலும் அலுவலகத்தில் நல்ல பெயரையும் அங்கீகாரத்தையும் பெறுவீர்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபாரிகள் நல்ல வளர்ச்சியையும், லாபத்தையும் பெறுவார்கள்.


கன்னி

கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் வியாபாரிகளுக்கு நன்றாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. கூட்டு தொழில் செய்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய திட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும்

துலாம்

துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்காது. உடலில் ஆற்றல் இல்லாதது போன்று பலவீனமாக இருக்க நேரிடும். எனவே ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாகவும் சாதகமாக இருக்காது. எனவே எவ்விதமான முதலீடுகளையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த காலத்தில் இந்த ராசிக்காரர்கள் சற்று கோபமாகவும் வெளிப்படையாகவும் பேசுவார்கள். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் எந்த ஒரு வேலையையும் பொறுப்புடன் செய்வதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை பொறுத்துக்கொள்வது சற்று கடினமாக இருக்கலாம். இதனால் உங்கள் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். இந்த நேரத்தில், உங்கள் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்துங்கள்.

தனுசு

தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் வாங்கலாம். தொழிலில் பெயரையும் புகழையும் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தொழில் தொடங்க வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்பத் தொழிலுடன் தொடர்புடையவர்களுக்கு, இந்த நேரம் சாதகமாக இருக்கும். ஏனெனில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் கூட்டு முயற்சியால் உங்கள் தொழில் செழிக்கும்.

மகரம்

மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் நிதி நிலையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இக்காலத்தில் உங்கள் நிதி நிலை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பெரிய முதலீடுகளை செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு சற்று நிலையற்றதாக இருக்கும். இதனால் பணியிடத்தில் உங்கள் இமேஜ் பாதிக்கப்படலாம்.

கும்பம்

கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை தம் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவதை உணரக்கூடும். இதனால் சற்று கவலைப்படலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த நேரம் உங்களுக்கு சாதகமாக இல்லை, இந்த காலத்தில் நீங்கள் சுவாசம் தொடர்பான பிரச்சினைகளை சந்திக்கலாம். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மீனம்

மீன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சூரியன் சென்றுள்ளார். இதனால் ஆரோக்கிய பிரச்சனைகளால் அதிகம் அவதிப்பட நேரிடும். வாகனம் ஓட்டும் போது சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் விபத்து ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. நிதி ரீதியாக, இக்காலத்தில் செய்யும் சிறு தவறுகளும் தீங்கை விளைவிக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் சில வேலைகளில் வெற்றியும் சிலவற்றில் தோல்வியும் ஏற்படலாம்.
SHARE