Thursday 16 May 2024

'யூடியூப் சனல்' மீது பாய்ந்தது நிகழ்நிலை காப்புச் சட்டம்..!!!

SHARE

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல்விக்கும் லியனகேவுக்கு எதிராக 'யூடியூப் சனல் ஒன்று அவதூறான தகவல்களை வெளியிடுவதையும் தொடர்பு கொள்வதையும் தடுக்கும்வகையில் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை(15) நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் நிபந்தனை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதிவான் திலின கமகே, 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்டத்தின் 24 (1) மற்றும் பிரிவு 24 (2) ஆகியவற்றின் அடிப்படையில் இராணுவத் தளபதிக்கு ஆதரவாக நிபந்தனையுடன் கூடிய உத்தரவைப் பிறப்பித்ததுடன், அந்த உத்தரவை பிரதிவாதிகளான 'யூடியூப் சனல்' மற்றும் அதன் உரிமையாளருக்கு அறிவிக்கவும் உத்தரவிட்டார்.


நாட்டின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில், தனக்கு எதிராக தீங்கிழைக்கும் மற்றும் அவதூறான காணொளி உள்ளடக்கங்கள் மற்றும் அறிக்கைகளை பிரதிவாதிகள் பதிவேற்றப்படுகின்றன என்று மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார். மனுதாரர் சார்பில் மூத்த சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் முன்னிலையாகியிருந்தார்.
SHARE