Tuesday, 14 May 2024

யாழில். கைதிகளை சிறைச்சாலைக்கு அழைத்து சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது..!!!

SHARE

யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு கைதிகளை ஏற்றி சென்ற , சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து, நேற்றைய தினம் திங்கட்கிழமை விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் கைதிகளை யாழ்ப்பாண சிறைச்சாலைக்கு ஏற்றி சென்ற போது , நாரந்தனை பகுதியில் முன்னால் சென்று கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் திடீரென நிறுத்தப்பட்டமையால் , பின்னால் சென்ற சிறைச்சாலைக்கு சொந்தமான பேருந்து மோதி விபத்துக்கு உள்ளானது.


விபத்தில் ஹயஸ் ரக வாகனத்தில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்த நிலையில் , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தினை அடுத்து , சிறைச்சாலை பேருந்தில் இருந்த கைதிகள் வேறு வாகனத்திற்கு மாற்றப்பட்டு , சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
SHARE