மூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற சிறப்புக்களை ஒருங்கே பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா இன்று(13) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
உற்சவ மூர்த்திகளுக்கு இன்று காலை விசேட பூஜைகள் நடத்தப்பட்டன.
பின்னர் சுபவேளையில் கொடியேற்றம் இனிதே நடைபெற்றது.
மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய மகோற்சவத்தில் தேர்த்திருவிழா எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ளது.|