Monday, 6 May 2024

பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்துவிடுமாம்..!!!

SHARE

பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

டெல்லி மெயில் அறிக்கையின்படி, பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். அதில், இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்படுள்ளது.


விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும். அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். அத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது. அனைத்தும் வெப்பத்தின் காரணமாக அழிந்துவிடும்.

பூமியில் நாம் கார்பனை வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு விரைவில் நிகழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், அந்த நேரத்தில் உலகில் கார்பன் டை ஆக்சைட்டின் அளவு இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். இதன் காரணமாக உடல் வெப்பமடைந்து மனிதர்கள் இறந்துப்போகும் சூழல் உருவாகும். பின்னர் பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்கும், அது பாங்கேயா அல்டிமா என்று அழைக்கப்படுகிறது.

பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதமட்டுமன்றி வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்து சிதறி, பூமியின் பெரும்பகுதி எரிமலையால் மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

அவ்வாறு நிகழும்போது அது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். அதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவார்கள். அதன்பிறகு படிப்படியாக பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்துவிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
SHARE