100 ஆண்டுகளுக்கு பின் அட்சய திருதியை நாளில் உருவாகும் யோகம்: பண மழையில் நனையும் ராசிகள்..!!!
ஒவ்வொரு ஆண்டும் அட்சய திருதியை நாளானது சித்திரை மாதத்தில் வரும் அமாவாசை நாளை அடுத்த மூன்றாவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த அட்சய திருதியை நாளானது பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாளாகும். இந்த நாள் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதற்கு உகந்த மிகவும் மங்களகரமான நாள். இந்நாளில் எந்த ஒரு பொருளை வாங்கினாலும் அது பெருகும் என்பது ஐதீகம். இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது மே 10 ஆம் தேதி வருகிறது.
வேத ஜோதிடத்தின் படி, இந்த ஆண்டின் அட்சய திருதியை நாளானது சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்நாளில் கஜகேசரி யோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் உருவாகும் ஒரு மங்களகரமான ராஜயோகமாகும்.
இந்த யோகத்தினால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. பணம் தேடி வரப்போகிறது. குறிப்பாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அட்சய திருதியை நாளில் உருவாகும் கஜகேசரி யோகமானது 10 ஆவது வீட்டில் உருவாகிறது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்கள் வேலையில் சிறப்பாக செயல்பட முடியும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள் மற்றும் வியாபாரத்தை விரிவாக்கும் வாய்ப்புக்களும் கிடைக்கும்.
மேஷம்
அட்சய திருதியை நாளில் மேஷ ராசியின் 2 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். வெளிநாட்டில் வியாபாரம் செய்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் வணிகர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பேச்சால் முக்கிய வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
கடகம்
அட்சய திருதியை நாளில் கடக ராசியின் 11 ஆவது வீட்டில் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தொழில் தொடர்பான சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். இந்த முடிவுகள் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும். பண வரவு அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டு. மாணவர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.