Sunday, 21 April 2024

இந்த வாரம் இந்த 8 தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது..!!!

SHARE

நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 21 ஏப்ரல் 2024 முதல் 27 ஏப்ரல் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் அடிப்படையில் நல்ல வெற்றி கிடைக்கும். நிதி நிலை மேம்படும். கடனில் இருந்து விடுபடுவீர்கள். காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி, உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால், வேலையிலும் சிறப்பாக செயல்பட முடியும்.


எண் 2

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சிறப்பாக இருக்கும். முழுமையடையாத எந்த வேலையும் முடிக்கப்படும். அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிக்கப்படும். பணிபுரிபவர்களின் கனவு நனவாகும். வெளியூர் பயணம் செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். இந்த வாரத்தில் செய்யும் முதலீடுகள் உங்களுக்கு மிகவும் லாபகரமாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும் ஒற்றுமையும் நிலவும். உடன்பிறந்தவர்களுடனான உங்கள் உறவு மேலும் வலுவடையும். பண விஷயத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். பணவரவு இருக்கும் மற்றும் உங்கள் நிதி முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள்.



எண் 3

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்த தொழிலதிபர்கள் ரிஸ்க்கை எடுத்தால், சரியான முடிவைப் பெறலாம். இந்த வாரம் கூட்டு தொழிலை தொடங்குவது பயனுள்ளதாக இருக்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், உங்கள் விருப்பம் நிறைவேறும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு செலவுகள் அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். வார இறுதியில் திடீர் உடல்நலக் குறைவால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு நிதி ரீதியாக அருமையாக இருக்கும். முதலீட்டின் மூலம் நல்ல லாபத்தை பெற வாய்ப்பு உள்ளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறக்கூடும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் அலுவலகத்தில் மிகவும் சீரான முறையில் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் தவறு செய்தால், அதை திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் அல்லது மோதலைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்களின் நிதி சிக்கல்கள் அதிகரிக்கலாம். உங்களுடைய முக்கியமான சில வேலைகள் முழுமையடையாமல் இருக்கும். சுற்றியுள்ளவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும். உங்கள் நிதி நிலையை வலுப்படுத்த செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். நிதி முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுத்தால், விரைவில் முன்னேற்றம் காண்பீர்கள்.



எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். விரைவான லாபத்தைப் பெற, தவறான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் சுமாராக இருக்கும். முன்னேற விரும்பினால், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். சிறிய வேலையை கூட விடாமுயற்சியுடன் செய்ய முயற்சி செய்யுங்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். நிறைய மருத்துவ செலவுகளை சந்திக்க நேரிடும்.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்த மாணவர்களுக்கு நன்றாக இருக்கும். வெளிநாடு சென்று படிக்கும் கனவு விரைவில் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த வாரத்தில் உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வருமானமும் உயர வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பேச்சு மற்றும் நடத்தையை நீங்கள் முழுமையாக கவனிக்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பாதகமான சூழ்நிலைகளில் கூட எளிதாக வேலை செய்யும் திறனால் பணியிடத்தில் உயர் அதிகாரிகளை கவர்வதோடு, பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. வேலையில்லாமல் இருந்தால், நீங்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். தொழிலதிபர்கள் லாபம் ஈட்ட பல வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் ஒரு பெரிய முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இந்த வாரம் அதற்கு சாதகமானது. காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். தேவையற்ற விஷயங்களில் துணையை சந்தேகப்படுவதைத் தவிர்த்தால் நல்லது. வார இறுதியில் நிதி நிலைமை பெரிய அளவில் மேம்படும்.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீட்டில் சில சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். வேலை தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கலாம் அல்லது விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். கூட்டுத் தொழிலில் ஈடுபட்டால் இந்த வாரம் லாபகரமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
SHARE