Friday, 19 April 2024

கடவுச்சீட்டு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு; 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிப்பு..!!!

SHARE


இணையவழியில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. இதனை குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

விண்ணப்பித்தவர்களில் 75 வீதமானோர் தொழில்நுட்ப அறிவு இல்லாததாலும், சில ஆவணங்கள் முறைசாரா முறையில் புதுப்பிக்கப்பட்டதாலும் அவர்களின் கடவுச்சீட்டு அச்சிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

அதேசயம் இணையவழியில் கடவுச்சீட்டு விண்ணப்பத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு மாவட்டத்தையும் உள்ளடக்கிய 51 பிரதேச செயலக அலுவலகங்களில் கைரேகை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, 3 நாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார். அதற்கமைய, பொதுச் சேவைகளின் கீழ் 192 041 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அவர்களில் 90,817 பேர் பிரதேச செயலகங்களால் கைரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 55,600 பேரின் கடவுச்சீட்டுகள் அச்சிடப்பட்ட நிலையில் , 3 நாள் விரைவு சேவையின் கீழ் 22,471 பேர் இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர்.

அவர்களில் 18,770 பேரின் கைரேகைகள் பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்தார்.

அவற்றில் 17,904 பேரின் பேரின் கடவுச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்கூறியுள்ளார்.
SHARE