மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..!!!
ஜோதிடத்தின் படி, நவகிரகங்களில் புத்திசாலித்தனம், வியாபாரம், பேச்சு, படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் அடிக்கடி தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவார். இப்படி மாற்றங்களை ஏற்படுத்தும் போதெல்லாம் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது புதன் வக்ர நிலையில் மீன ராசியில் பயணித்து வருகிறார். புதன் வக்ர நிலையில் இருப்பதால், புதனால் பெறவுள்ள நற்பலன்கள் தடைபட்டன. இந்நிலையில் புதன் ஏப்ரல் 25 ஆம் தேதி மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். அதாவது மீன ராசியில் நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். புதன் வக்ர நிவர்த்தி அடைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த புதன் வக்ர நிவர்த்தியால் அதிர்ஷ்டம் பெறவுள்ளார்கள். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளார்கள். இப்போது மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதனால் தொழிலில் நல்ல பலன்களைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் 2 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏப்ரல் 25 முதல் எதிர்பாராத பணத்தைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பேச்சாற்றல் அதிகரிக்கும். பேச்சால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். வணிகர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசியின் 9 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் ஏப்ரல் 25 முதல் பிரகாசிக்கவுள்ளது. சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். நல்ல நிதி நன்மைகளைப் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களைப் பெறலாம். இக்காலத்தில் புதிய வேலைகளைத் தொடங்கினால் நல்ல பலன்களைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இக்காலத்தில் நல்ல வேலை கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும். பெற்றோரின் முழு ஆதரவு கிடைக்கும். பேச்சால் பல முக்கியமான காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.