இன்றைய ராசிபலன் - 21.04.2024..!!!
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன உறுதியான நாளாக இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் அவ்வளவு லேசாக விட்டு விட மாட்டீர்கள். மனதில் நினைத்த காரியத்தை நடத்தியே தீருவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தோல்வியால் துவண்டு போய் இருப்பவர்களுக்கு நீங்கள் ஒரு ரோல் மாடலாக தெரிவீர்கள். அடுத்தவர்களை ஊக்குவிக்கும் அளவுக்கு இன்று உங்களுடைய முன்னேற்றம் மேலோங்கி நிற்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எண்ணில் அடங்காத நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். நீங்கள் நினைத்துப் பார்க்காத நல்லது உங்களைத் தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். கணவன் மனைவிக்கிடையே சண்டை சச்சரவுகள் வரும். ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடந்தால் நல்லது நடக்கும். இல்லை என்றால் குடும்பத்தில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது ஜாக்கிரதை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையை செய்த பிறகும், ஒரு மன திருப்தி உங்களுக்கு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். இன்று மாலை கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் சில பேருக்கு கிடைக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதமும் கிடைக்கும். உங்களுடைய குழந்தைகளின் போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத பண வரவு மனதிற்கு அமைதியைத் தரும். நீண்ட நாட்களாக தர முடியாத கடன் பாக்கியையெல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். வீட்டிற்கு தேவையான உபயோகமான பொருட்களை வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. பொன் பொருள் சேர்க்கை உண்டு.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் கோபம் நிறைந்த நாளாக இருக்கும். சிடுசிடுன்னு இருப்பீங்க. யாரையும் கிட்ட சேர்க்க மாட்டீங்க. வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். ரிலாக்ஸ் ஆன நாளாக இன்று இருக்காது. இதனை சரி செய்ய வேண்டும் என்றால் இன்று மாலை குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்யுங்கள். வெளியிடங்களுக்கு சென்று மனதை ரிலாக்ஸ் பண்ணுங்க. மனதிற்கு பிடித்த பாடலை கேளுங்க.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தொட்டதற்கெல்லாம் மன பயம் இருக்கும். எந்த வேலையை செய்வதற்கு முன்பும் பலமுறை யோசிப்பீர்கள். இருந்தாலும் அதில் பிரச்சனை வரக்கூடிய சூழ்நிலை உண்டாகும். இதனால் புதிய முயற்சிகளை கைவிடுவீர்கள். மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வ வழிபாட்டை செய்யுங்கள். நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்க போகின்றது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் நடக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். குழந்தை பாக்கியத்திற்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். வீடு வாங்குவது நிலம் வாங்குவது போன்ற நல்ல காரியங்களை இன்று செய்யலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் நல்லதாக ஒரு புடவை கட்டிக் கொண்டு போனாலும், அதை பார்த்து கண் வைப்பார்கள். கண் திருஷ்டி விழுவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க. எல்லா விஷயங்களையும் வெளிப்படையாக பேச வேண்டாம். நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சில விஷயங்களில் ஒளிவு மறைவு இருக்கட்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சொன்ன வேலையை சரியான நேரத்தில் முடித்துக் கொடுப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் கூடுதல் மதிப்பு கிடைக்கும். குடும்பத்தில் மாமியார் மருமகள் உறவு பலம் பெறும். மாமியாரை பற்றி மருமகள் பெருமை பேசுவதும், மருமகளை பற்றி மாமியார் பெருமை பேசுவதும் இன்று ஒரே குதூகலமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கையில் இருக்கும் இருப்பு செலவு ஆவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. 500 ரூபாய் நோட்டாக வைத்திருந்தால் சில்லரை மாத்தாதீங்க. கவனமா இருங்க. கண்ணுக்கு தெரியாமல் பணத்தை ஒலித்து வைத்து விடுங்கள். இல்லை என்றால் 500 ரூபாயும் அம்பேல் பார்த்துக்கோங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிதாக தொடங்கும். வீட்டில் சுப காரிய நிகழ்ச்சிகள் இருக்கும். மனது ஆன்மீகத்தை நாடும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து தொலைபேசியின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை சக ஊழியர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். தொழிலில் கூடுதல் கவனம் இருக்கட்டும். முதலீடு செய்வதில் அலட்சியம் வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். அடித்த பிடித்து போராடி எப்படியாவது வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இன்றைய வேலைகளை செய்வீர்கள். விடாமுயற்சி உங்களுக்கு வெற்றியை கொடுக்கும். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிட வேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.