Tuesday 12 March 2024

கிளிநொச்சி பாடசாலை மாணவர்களை உதாசீனம் செய்த பேருந்து; பெற்றோர் ஒருவரின் அதிரடி முடிவு..!!!

SHARE

கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை க்கு செல்ல காத்திருந்த மாணவர்களை பஸ்களில் ஏற்றாது , பயணித்து சென்ற பேருந்தை அங்கிருந்த பெற்றோர் ஒருவர் மறித்து மாணவர்களை ஏற்றிவிட்டசம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை 7.40 வரை எந்தவொரு பஸ்ஸும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ள நிலையிலேயே குறித்த பெற்றார் அதிரடி நடவடிக்கை இறங்கி மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுவதனால் மாணவர்கள் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுகின்றதாக பாதிக்கப்பட்ட மாணர்களின் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

அதிகாலைல் சீக்கிரம் பாடசாலை செல்ல பஸ் தரிப்பிடத்தில் காத்திருக்கும் மாணவர்களை பேருந்துக்கள் ஏற்றாது விட்டுச்செல்வதனால் சில சமயங்களில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பஸ்ஸூக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி அனுப்பி வைத்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த பிரச்சினையானது, எழுதுமட்டுவாள் தொடக்கம் இயக்கச்சி வரையான சுமார் 8 க்கு மேற்பட்ட பிரதேசங்களில் காணப்படுகிறது.

பாடசாலைகள் கற்றல் செயற்பாடுகள் 7.30க்கு ஆரம்பிக்கும் நிலையில், இவ்வாறு மாணவர்கள் பிந்தி செல்லுதல் மற்றும், செல்லாதுவிடல் காரணமாக பல்வேறு பிரச்சினைகளிற்கு முகம் கொடுக்கின்றனர்.

மன உளைச்சலுக்கு மாணவர்கள் ஆளாவதுடன், கல்வியில் ஆர்வம் காட்டுதல் மற்றும் பூரண கல்வியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றனர். அத்துடன், பாடசாலை இடைவிலகலுக்கும் உந்துதலை கொடுக்கும் அபாயமும் காணப்படுகிறது.

மாணவர்களின் கல்வி மற்றும் இணை செயற்பாடுகளிற்கு ஊக்கமளிக்கும் வகையில், அந்த பிரதேச மாணவர்களின் போக்குவரத்தினை சீர் செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் உள்ளது.

எனவே மாணவர்களின் நலன் கருதி இது தொடர்பில் வடமாகாண ஆளுநர் நேரடியாக தலையீடு செய்து, உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர்.
SHARE