துவாரகாவின் கணவர் நானே; வெளியானது அடுத்த பரபரப்பு..!!!
விடுதலைப்புலிகளின் தலைவர் மகள் துவாரகா என் மனைவி என சுவிஸ்வாழ் தமிழர் ஒருவர் உரிமை கோரியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்தவருட மாவீரர் நாளில் பிரபாகரனின் மகள் நான் தான் என உரையாற்றிய காணொளி வெளியாகி இருந்தது.
எனினும் தலைவரின் மகள் துவாரகா அவர் அல்ல என கூறப்பட்ட நிலையில் தற்போது போலி துவாரகாவின் கணவர் நானே என குறித்த நபர் உரிமைகோரியுள்ள காணொளி வெளியாகி உள்ளது.
அத்துடன் அவர் உண்மையான துவாரகா இல்லை எனவும் போலி துவாரகாவை உரிமைகோரியுள்ள கணவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.