திடீரென மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு..!!!
கலவானை, மீபாகம பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் இன்று (06) மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கலவான பொலிஸார் தெரிவித்தனர்.
கலவான பிரதேசத்தை சேர்ந்த இமல்கா சத்ஸரணி என்ற 13 வயதுடைய பாடசாலை மாணவியே உயிரிழந்துள்ளார்.
இவர் பாடசாலையில் 08ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவியாவார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் இறந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.