வழமைக்கு திரும்பியது பேஸ்புக்..!!!
உலகளாவிய ரீதியில் சமூக ஊடகங்களில் ஒன்றான பேஸ்புக் செயலிழந்து காணப்பட்ட நிலையில், சுமார் ஒரு மணி நேரத்தின் பின் மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
பேஸ்புக் கணக்குகள் திடீரென செயலிழந்திருந்ததாக இன்று செவ்வாய்க்கிழமை (5) பயனர்கள் முறையிட்டிருந்தனர்.
அந்தவகையில், உலகளாவிய ரீதியில் முடங்கி இருந்த பேஸ்புக், இன்ஸ்டாக்ராம் மற்றும் மெசெஞ்சர் ஆகியன மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளன.
இந் செயலிழப்புக்கான காரணத்தை இதுவரை மெட்டா நிறுவனம் இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை.