சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் புதிய தகவல்..!!!
சாந்தனின் உடல் நேற்றையதினம்(01) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் சாந்தனின் இறுதிக்கிரியைகள் நாளை(03) இடம்பெறவுள்ளதாக நேற்றையதினம் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் இறுதிக் கிரியை இடம்பெறுவது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என அவரது சகோதரர் மதிசுதா தெரிவித்துள்ளார்.
அவரது பூதவுடலுக்கு மீள் உடற் கூற்றுப் பரிசோதனை செய்யப் பணிக்கப்பட்டுள்ளதால் இறுதிக் கிரியை இடம்பெறும் திகதியை உறுதிப்படுத்த முடியாதுள்ளதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உயிரிழந்த சாந்தனின் உடல், நேற்றையதினம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.