Saturday, 2 March 2024

‘வேற லெவல்’ கங்குவாவை மகனுடன் சேர்ந்து ரசித்த பாபி தியோல்..!!!

SHARE

இயக்குநர் சிறுத்தை சிவா – நடிகர் சூர்யா கூட்டணியில், ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘கங்குவா’.

இதில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானியும், உதிரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக பாபி தியோலும் நடித்திருக்கின்றனர். யோகி பாபு, ஜெகபதி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

ஃபேண்டஸி கலந்த சரித்திர படமாக உருவாகியிருக்கும் ‘கங்குவா’ தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தில் நடிகர் சூர்யா ஆறு விதமான கெட்டப்பில் நடித்திருக்கிறாராம்.

சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளின் போது ‘கங்குவா’ படத்தின் காட்சிகளை பார்த்த நடிகர் சூர்யா திருப்தி அடைந்து, இயக்குநர் சிவா மற்றும் குழுவினருக்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார் என்று தகவல் வெளியானது.

இந்நிலையில் சென்னையில் ‘கங்குவா’ படத்தின் காட்சிகளை நடிகர் பாபி தியோல், தனது மகன் ஆர்யமான் தியோல் உடன் பார்த்து ரசித்திருக்கிறார். இது குறித்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, “உங்கள் மகனுடன் இணைந்து கங்குவா படத்தின் காட்சிகளைப் பார்த்து ரசித்து மகிழ்ந்தது எங்கள் நாளை சிறப்பாக மாற்றியது” என்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒரு தனி பாடலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக வருகின்ற ஆகஸ்ட் மாதம் ‘கங்குவா’ வெளியாகும் என தெரிகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தேதியினை படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
SHARE