Sunday, 3 March 2024

சாந்தனின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் புதிய தகவல்..!!!

SHARE

இன்று(03.03.2024) காலை 8:00 மணிக்கு வவுனியா பழைய பஸ் நிலையத்தில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ள அதே வேளையில் தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மாங்குளத்திலும் காலை10:30 ற்கு கிளிநொச்சியிலும் அதனைத்தொடர்ந்து 11:30 மணிக்கு இத்தாவில் பகுதியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு கொடிகாமம் ஊடாக புகழுடல் எடுத்துச்செல்லப்பட்டு,

பிற்பகல் 2: 00 மணி தொடக்கம் 3:00 மணி வரை வல்வெட்டித்துறை தீருவிலில் பொதுமக்களின் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்படும் என ஏற்பாட்டாளர்களால் தெரிவிக்கப்பட்ட அதேவேளை நாளைய தினம் கேளிக்கை நிகழ்வுகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் கறுப்புக்கொடிகளை கட்டி தமிழ்த்தேசிய துக்கநாளாக அனுஸ்டிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

இறுதிக் கிரியைகள் உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு இடம்பெறும்

SHARE