Saturday, 2 March 2024

நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு..!!!

SHARE

இன்று (02) நள்ளிரவு முதல் உணவுப்பொருட்களின் விலைகளை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்தது.

தேநீர் 5 ரூபாவினாலும் கொத்து/ ப்ரைட்ரைஸ் 50 ரூபாவினாலும், பால் தேநீர் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

அத்துடன், உணவுப் பொதி 25 ரூபாவினாலும், பரோட்டா மற்றும் முட்டை ரொட்டி 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகள் 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே விலை அதிகரிக்கப்பட்ட மூலப்பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமையினால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
SHARE