Friday, 1 March 2024

மார்ச் மாதம் இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் நல்ல வளர்ச்சியையும், இலாபத்தையும் பெற போறாங்க..!!!

SHARE

2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் நுழைந்துவிட்டோம். இந்த மாதத்தில் பலருக்கும் பலவித எதிர்பார்ப்புகள் இருக்கும். முக்கியமாக வேலை செய்பவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள மிகவும் ஆவலுடன் இருப்பார்கள்.

மார்ச் மாத கிரக நிலைகளின் படி, இந்த மாதத்தில் சில ராசிக்காரர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவார்கள் மற்றும் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றையும் பெறுவார்கள். அதே சமயம் சில ராசிக்காரர்கள் அதிகம் போராட வேண்டியிருக்கும். இப்போது 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 12 ராசிக்காரர்களின் தொழில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.


மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் தொழில் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வியாபாரிகள் இம்மாதத்தில் லாபத்திற்கு பதிலாக நஷ்டத்தை சந்திக்க நேரிடும். அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளில் கலந்து கொள்பவர்களுக்கு வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதமானது தொழில் ரீதியாக சாதகமாக இருக்கும். ஆனால் கடினமாக உழைத்தால் தான் உங்கள் வேலையில் வெற்றியைப் பெற முடியும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுவதன் மூலம், பதவி உயர்வைக் காணலாம். வியாபாரிகளுக்கு இம்மாதம் நன்றாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! நீங்கள் மார்ச் மாதத்தில் புதிதாக தொழிலை மேற்கொள்ள நினைத்தால், அதை சற்று தள்ளிப் போடுங்கள். ஏனெனில் இம்மாதமானது தொழில் ரீதியாக ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். நிறைய போராட வேண்டியிருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படலாம். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இம்மாதத்தில் உங்கள் வேலையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டும்.


கடகம்

கடக ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை வைத்துக் கொண்டால், பதவி உயர்வைப் பெறலாம். தொழில் ரீதியாக இம்மாதம் இனிமையாக இருக்கும். வேலையில் உங்களின் அர்ப்பணிப்பு உங்களுக்கு நல்ல முன்னேற்றத்தையும் வெற்றியையும் தரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழில் ரீதியாக மார்ச் மாதம் சிறப்பாக இருக்கும். அரசு வேலைக்கு காத்துக் கொண்டிருப்பவர்கள் அல்லது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்திறன் உயர் அதிகாரிகளுக்கு தெரியவரும். இதன் காரணமாக பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெறலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதமானது தொழில் ரீதியாக சுமாராக இருக்கும். ஆனால் கடின உழைப்பிற்கு ஏற்ற வெற்றி கிடைக்குமா என்பது சந்தேகம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்காது இம்மாதத்தில் எவ்வளவு முயற்சி செய்தாலும் வெற்றிக்கான வாய்ப்பு குறைவு.


துலாம்

துலாம் ராசிக்காரர்களே! மார்ச் மாதம் தொழிலை நினைத்து சற்று கவலைப்படுவீர்கள். உங்கள் திறமைக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் வருத்தப்படுர்கள். இம்மாதத்தில் எந்த வேலையிலும் வெற்றி கிடைக்காது. இதனால் மிகுந்த மனச் சோர்வுக்கு ஆளாகலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் தொழிலைப் பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக செயல்படலாம். இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. மொத்தத்தில், இம்மாதத்தில் வேலையில் வெற்றி காண நிறைய போராட வேண்டியிருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் நிதி நிலை காரணமாக தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக இம்மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் உங்களின் செயல்கள் உங்கள் உழைப்பை அழித்துவிடும். எனவே உங்கள் நடத்தையில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

மகரம்

மகர ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் உங்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். இம்மாதத்தில் நீங்கள் வேலை தொடர்பாக எடுக்கும் எந்த ஒரு முடிவும் தவறானதாக இருக்கும். எனவே எதிர்மறை எண்ணங்களில் இருந்து விலகி, தெளிவாக யோசித்து, எந்த விஷயத்தையும் செய்யுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். விரும்பிய வேலை கிடைக்கும். இதனால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இம்மாதத்தில் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். உங்களின் மரியாதை இம்மாதத்தில் அதிகரிக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! மார்ச் மாதத்தில் உங்கள் வேலையில் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்த வேலையை செய்ய விரும்புகிறீர்களோ, அந்த வேலை இம்மாதத்தில் உங்களுக்கு எளிதில் கிடைக்கும். குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் வாழ்க்கை துணையின் ஆதரவால், உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
SHARE