Wednesday, 6 March 2024

300 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரி அன்று உருவாகும் அரிய யோகம்... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் ராசியினர் யார்?

SHARE

மகா சிவராத்திரி தினம் இந்துக்களுக்கு மிகவும் முக்கியமாக ஒரு நாளாக கருதப்படுகின்றது. சிவபெருமான் தேவர்களுக்கெல்லாம் தேவர் மகாதேவர் என அழைக்கப்படுகின்றார்.

சிவ பக்தர்களுக்கு மகா சிவராத்திரி மிகவும் விஷேசமானது. இந்நாளில் தான் சிவன் பார்வதிக்கு திருமணம் நிகழ்ந்ததாக இந்து ஆகமங்களில் குறிப்பிடப்படுகின்றது.

எனவே தான் அந்நாளில் சிவன் மற்றும் பார்வதி ஒன்றாக போற்றப்படுகின்றார்கள். 300 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு வரப்போகும் மகாசிவராத்திரி தினத்தில் சிறப்பான அரிய நிகழ்வு நடைபெறபோகின்றது.

அந்த வகையில் மார்ச் 8ஆம் திகதி சர்வார்த்தசித்தி யோகம், சித்தயோகம், சிவயோகம் உருவாக போவதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகின்றது. குறித்த அரிய நிகழ்வின் காரணமாக சில ராசியினருக்கு பெரிய அதிர்ஷ்டம் காத்திருக்கின்றது.

அவ்வாறு மகா சிவராத்திரியின் பின்னர் பலனடைய போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.


மேஷம்

மேஷம் ராசியினருக்கு இந்த ஆண்டு மகா சிவராத்திரி அமோகமான பலனை கொடுக்கும். இவர்கள் யாரிடமாவது காதலை வெளிப்படுத்த விரும்பினால் இந்த சிவராத்திரி தினத்தில் வெளிப்படுத்துவது வெற்றியளிக்கும். வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெறும் வாய்ப்பு ஏற்படும்.


ரிஷபம்

ரிஷப ராசியினருக்கு மகா சிவராத்திரி மிகுந்த அதிர்ஷ்டம் கொடுக்கக் கூடியதாக அமையும். மகா சிவராத்திரி தினத்தின் பின்னர் ரிஷப ராசியினர் வாழ்க்கையில் மகிழ்ச்சியான விடயங்கள் அனைத்தும் நிகழ ஆரம்பிக்கும்.

மிதுனம்

மிதுன ராசியினருக்கு மகாசிவராத்திரி மிகவும் சிறப்பான பலன்களை கொடுக்கும். வாழ்வில் மகிழ்ச்சியான தருணங்களின் ஆரம்பமாக இந்த நாள் அமையும். இதுவரையில் நிலுவையில் இருந்த அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.


சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த ஆண்டு மகா சிவராத்திரியில் நல்ல செய்தியொன்று கிடைக்கும். இதன் பின்னர் தொழில் தொடர்பான விடயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.


துலாம்

துலாம் ராசியியருக்கு சிவராத்திரி மிகவும் சிறப்பான தினமாக அமையும். அதன் பின்னர் பணப்பிரச்சினைகள் அனைத்தும் நீங்கும். வெற்றிக்கான அனைத்து பாதைகளும் திறக்கப்படும். மகிழ்ச்சியான விடயங்கள் நடக்க ஆரம்பிக்கும்.


கும்பம்

கும்ப ராசியினருக்கு மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்த தினமாக அமையும். இந்த ராசிக்காரர்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். நிதி நிலையில் பாரிய மாற்றங்கள் ஏற்படும்.
SHARE