கேது நட்சத்திர பெயர்ச்சி: பேரதிர்ஷ்டத்தை பெறும் 3 ராசிகள் இவர்கள் தான் ..!!!
கேது கிரகத்தில் நட்சத்திர பெயர்ச்சி மூலம் பேரதிர்ஷ்டத்தினை பெறும் 3 ராசியினரைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
நிகழ் கிரகங்கள் என்று வேத ஜோதிடத்தில் கருதப்படும் ராகு மற்றும் கேது பாவ கிரகங்கள் என்றும் கருதப்படுகின்றது.
இந்த இரு கிரகங்களும் ஒரு ராசியில் 18 மாதங்கள் பயணிக்கும் நிலையில், வக்ர நிலையில், அதாவது பின்னோக்கியே இதன் பயணம் இருக்கும்.
கேது கிரகம் எந்த கிரகமும் சேர்ந்தாலும் பல மடங்கு பலனைத் தரும் என்றாலும், அசுப பலன்களை கொடுக்க தொடங்கினால் தாங்க முடியாத அளவிற்கு பிரச்சினை வருமாம்.
முக்கியமாக பணம், குடும்பம் மற்றும் ஆரோக்கியம் என அடுத்தடுத்து பிரச்சினை எழும். இன்னும் சில தினங்களில் கேதுவின் நட்சத்திர பெயர்ச்சி நடக்கவுள்ளது.
கேது நேற்றைய தினத்தில் சந்தினின் அஸ்தம் நட்சத்திரத்திற்கு செல்ல உள்ளார். இந்த நட்சத்திரத்தில் 2024 நவம்பர் 10ம் தேதி வரை பயணிப்பார். இத்தருணத்தில் அதிர்ஷ்டத்தை பெறும் ராசியினரை இங்கு தெரிந்து கொள்வோம்.
மேஷம்
கேது கிரகமானது மேஷ ராசியில் 6வது இடத்தில் இருப்பதால் சிறப்பான பலனை இந்த ராசியினர் பெறுகின்றனர். முக்கியமாக கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதுடன், ஆரோக்கியத்தில் முன்னேற்றமும் ஏற்படும்.
நிலுவையில் இருந்த வேலைகளில் வெற்றி, சட்ட விடயமாக இருந்த பிரச்சினையிலும் வெற்றியை காண்பீர்கள். தாய்வழியால் நல்ல செய்திகளை பெறும் உங்களின் தடைகள் யாவும் அகன்று போகும்.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு செல்வ வீடான 2வது வீட்டில் கேது உள்ளார். புதிய வருமான ஆதாயங்கள் மற்றும் அற்புத பலன்களை பெறுவதுடன், அனைத்திலும் வெற்றியும் கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சினை முடிவுக்கு வருவதுடன், மனக்கசப்புகளும் தீர்ந்து போகும்.
ஏப்ரல் 30ம் தேதிக்கு பின் கேது உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வழிவகை செய்வார்.
தனுசு
கேது கிரகமானது தனுசு ராசியில் 10வது வீட்டில் உள்ளதால், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாகவே முடிந்து, சிறப்பான பலன்களை ஏப்ரல் 30க்கு பின்பு வாரி வழங்குவார்.
மே 1ம்தேதி குரு ராசியை மாற்றுவதால், குடும்பத்தினரடன் நேரம் செலவழிக்கும் வாய்ப்பும், தொழில் ரீதியான சிறப்பான பலன்கள், பதவி உயர்வு சம்பள உயர்வு என கிடைக்கும். போட்டித் தேர்வில் கலந்து கொள்பவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவதுடன், நிதி நிலையிலும் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள்.