2024 ஆம் ஆண்டில் நடத்தப்படும் பரீட்சைகள் தொடர்பிலான பரீட்சைகள் திணைக்களத்தின் அறிவிப்பு..!!!
இந்த வருடத்திற்குள் நடத்தப்படவுள்ள பாடசாலை பரீட்சைகள், அவை நடத்தப்படும் திகதிகள் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தினால் இன்று (01) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய 2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் 06 ஆம் திகதி முதல் மே மாதம் 15 ஆம் திகதி வரை நடத்தப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையை செப்டம்பர் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் கூறியுள்ளது.
2024 கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 25 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தர பரீட்சை இடம்பெறும் திகதி தொடர்பில் இதுவரை அறிவிக்கப்படவில்லை.