18 மாதங்கள் கழித்து கும்பத்தில் நிகழும் சூரியன் செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்..!!!
வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் தளபதியான செவ்வாயும், கிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும் மார்ச் மாதத்தில் ஒன்றிணைந்து பயணிக்கவுள்ளனர். அதுவும் இந்த சேர்க்கையானது சுமார் 18 மாதங்களுக்கு பின் கும்ப ராசியில் நிகழவுள்ளது.
இப்படி பல மாதங்களுக்கு பின் இச்சேர்க்கை நிகழ்வதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். கிரகங்களின் ராசி மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதுவும் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் செவ்வாய் சூரியனுடன் சனி பகவானின் ராசியில் ஒன்றாக பயணிக்கவுள்ளார்.
இந்த சேர்க்கையால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம். இப்போது கும்ப ராசியில் நிகழும் சூரியன் செவ்வாய் சேர்க்கையால் நல்ல அதிர்ஷ்டத்தைப் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கை வருமானம் மற்றும் லாப வீட்டில் நிகழ்வதால், இச்சேர்க்கை காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் பெரிய உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்புக்களைப் பெறலாம். பணிபுரிபவர்கள் வேலைகளில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். வியாபாரம் மற்றும் தொழுலில் எடுக்கும் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் பெரிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சூரியன் செவ்வாய் சேர்க்கை நிகழவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பங்களைப் பெறுவார்கள். புதிய வாகனங்கள், சொத்துக்களை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. முக்கியமாக பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் செவ்வாய் சூரியன் சேர்க்கை நிகழவுள்ளது. இந்த சேர்க்கையானது பணம் மற்றும் பேச்சின் வீட்டில் நிகழவுள்ளதால், இந்த ராசிக்காரர்கள் பேச்சால் பல விஷயங்களை சாதிப்பார்கள். பேச்சு தொடர்பான துறையில் இருப்பவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். நீண்ட நாள் ஆசைகள் இக்காலகட்டத்தில் நிறைவேறும். புதிய தொழிலை தொடங்க வேண்டுமென்ற எண்ணம் இருந்தால், அதை இக்காலத்தில் செய்தால் நல்ல பலனைப் பெறலாம்.