Monday, 11 March 2024

இன்றைய ராசிபலன் - 11.03.2024..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அமைதி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. யார் பிரச்சனைக்கும் நீங்க போக மாட்டீங்க. உங்க பிரச்சனைக்கு யாரும் வர மாட்டாங்க. உங்களுடைய அன்றாட வேலை சுமூகமாக செல்லும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய குடும்ப விஷயங்களை அனாவசியமாக ரொம்பவும் தெரிந்த நண்பர்களிடத்திலும் கூட பகிர வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வீடு தேடி புகழ்ச்சி வந்து சேரும். உங்களை பாராட்டுவதற்காகவே நாலு பேர் வருவாங்க. அந்த அளவுக்கு இன்று உங்களுக்கான பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். இன்று செய்த நல்லதுக்கு இன்றே புகழ்ச்சி கிடைக்க வேண்டும் என்பது கிடையாது. நீங்க முன்னாடி செய்த நல்ல காரியத்திற்கு இன்று பாராட்டு கிடைக்கும். என்ஜாய் பண்ணுங்க.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வந்தாலும் அதை சமாளிக்க கூடிய தெம்பு உங்களிடத்தில் இருக்கும். காலை வந்த பிரச்சனையை மாலையிலேயே சரி செய்து விடுவீர்கள். தொழிலிலும் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். ஆனால் அதை சமாளிக்கும் திறமை உங்களிடத்தில் இருக்கு. நேர்மையாய் இருங்க. தைரியமா பேசுங்க நிச்சயம் நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் சிரமங்களை பெரிசாக பார்க்காமல் அதை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு, உங்களுடைய வேலையில் கவனம் இருக்க வேண்டும். அப்போதுதான் இன்றைய நாள் இறுதியில் மன நிம்மதி அடைவீர்கள். மன அழுத்தம் இல்லாத தூக்கத்தையும் பெற முடியும். சிரமங்களை எதிர்கொள்ள நல்லா சாப்பிடுங்க. நல்ல தண்ணீர் குடிங்க. அப்பதான் கஷ்டத்திலும் தெம்பாக வேலை செய்ய முடியும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உறவுகளின் மூலம் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மகனாக இருந்தாலும், மகளாக இருந்தாலும் அளவோடு பேசுங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம். பிரச்சனைகள் வந்தாலும் விட்டுக் கொடுத்து செல்லவும். கடன் பிரச்சனையில் சிக்கி இருப்பவர்கள் கைநீட்டி கடன் வாங்கியவரிடம் அதிகாரம் செய்யக்கூடாது. பணிவாக பேசவும் வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை எதிர்த்து பேசாதீங்க பாத்துக்கோங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்தையும் ஒரு கை பார்க்க வேண்டும். எல்லா விஷயத்திலும் ஜெயிக்க வேண்டும் என்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பம்பரம் போல சுற்றி வருவீர்கள். இதனால் புதிய நட்பு கிடைக்கும். புதிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. வரக்கூடிய வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தினால் இன்று நிச்சயம் பெரிய அளவில் சாதிக்கலாம்.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. உங்களை முன்னேற விடாமல் தடுப்பதற்கு எதிரிகள் காத்துக் கொண்டு இருப்பார்கள். அது கூட பிரச்சினை கிடையாது. உங்களை வீழ்த்த வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பார்கள். எதிரிகளில் சூழ்ச்சியில் இருந்து தப்பிக்க நீங்க தந்திரமாக செயல்படனும். எல்லாம் உங்களுக்கு தெரிந்தாலும் தெரியாது போலவே நடித்து சில விஷயங்களை சாதித்தாலே போதும். இன்று வரக்கூடிய பிரச்சினைகளை சமாளிக்கலாம். அதிகமா பேசாதீங்க இன்னைக்கு அமைதியாய் இருப்பது நல்லது.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வரவு நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வாரா கடன் வசூல் செய்யலாம். நீண்ட நாட்களாக இழுப்பறையாக இருந்து வந்த கோர்ட்டு கேஸ் வழக்குகளை பற்றி இன்று பேசுங்கள். அந்த வழக்குகளில் இருந்து வெளிவருவதற்கு ஒரு நல்ல ஐடியா கிடைக்கும். கூடவே குலதெய்வ வழிபாட்டையும் செய்யும்போது இன்று இரட்டிப்பு பலனை அடையலாம்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய மதிப்பையும் மரியாதையும் உயர்த்திக்கொள்ள தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். அதில் வெற்றியும் காண்பீர்கள். அதற்கான பாராட்டுகளும் உங்களுக்கு கிடைக்கும். மேல்படிப்புக்காக முயற்சி செய்பவர்கள் அரசாங்க வேலைக்கு முயற்சி செய்பவர்கள் அதற்கான தேர்வு எழுத தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். இன்று நல்லது நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று என்னதான் வேலை செய்தாலும் நல்ல பெயர் கிடைக்காது. என்னதான் நட்புறவு பழகினாலும் பகை உண்டாகும். இதனால் சின்ன சின்ன சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலை இருக்கும். கவலைப்படாதீங்க எல்லா பிரச்சனைகளையும் சமாளிக்க தேவையான தெம்பையும் அந்த கடவுள் உங்களுக்கு கொடுப்பான். பிரச்சனைகளில் இருந்து விடுபட நிதானமாக யோசிக்கவும். அவசரமாக எந்த முடிவையும் இன்னைக்கு எடுத்துறாதீங்க.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இன்பம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. குழந்தை மனைவி அம்மா அப்பா என்று சந்தோஷமாக நேரத்தை கழிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வாரத்தின் துவக்க நாள் இன்று இருந்தாலும் வேலையில் பெரியதாக பிரஷர் இருக்காது. தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகளில் இருந்து வெளி வருவீர்கள் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். வார தொடக்கத்திலேயே எதுவும் சரியா நடக்கலையே, இந்த வாரத்தை எப்படி ஓட்டுவது என்ற சிந்தனையும் உங்களுக்கு அதிகமாக இருக்கும். கவலைப்படாதீங்க பிரச்சனைகள் சரியாக கூடிய நேரமும் காலமும் கைக்கூடி வந்துவிட்டது. பொறுமையாக இருந்தால் சாதிக்கலாம். பிரச்சனையிலிருந்து விடுபடலாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத கெட்ட பழக்கத்துக்கு அடிமையாகாமல் உங்களை பார்த்துக்கோங்க. தேவையற்ற சகவாசங்களை துண்டிப்பது நல்லது.
SHARE