Tuesday 12 March 2024

இந்த வார ராசிபலன் 11/03/2024 முதல் 17/03/2024 வரை..!!!

SHARE

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆசைகள் நிறைவேறும் வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறு உபாதையாக இருந்தாலும் உடனே கவனித்துக் கொள்வது நன்மையை தரும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணரீதியான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். எந்த ஒரு வேலையை தொட்டாலும் அந்த வேலையை முடித்த பிறகு மற்ற வேலையை தொடங்குவது நன்மையை தரும். ஒரு சிலருக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி நன்மைகள் உண்டாக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிதானத்துடன் செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டு. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வருமானத்தை அதிகரிக்க மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதற்கேற்ற சலுகைகளும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. இருப்பினும் உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாக இருப்பது பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ள உதவும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அதன் மூலம் கடன்கள் தீருவதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலை முன்னேற்ற பாதையை நோக்கி எடுத்துச்செல்வீர்கள். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு அம்பிகையை வழிபட வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புத்திசாலித்தனமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்ப்பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்பட்டாலும் வீண் விரயங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உடல் நலத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறு பாடுகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். வாகனங்களில் செல்லும் பொழுது கவனமாக செல்ல வேண்டும்.

வேலையை பொருத்தவரை புதிதாக எந்த வேலைக்கும் முயற்சி செய்யாமல் இருப்பது நன்மையை தரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாக்கும். புதிதாக எந்த முதலீடும் செய்யாமல் இருப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பிரிந்து சென்ற கணவன் மனைவி ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வார்கள். எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். வேலையை சிறப்பாக செய்து முடிப்பதன் மூலம் நல்ல ஆதாயத்தை பெற முடியும். இருப்பினும் உயர் அதிகாரிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். எப்போதோ செய்த முதலீட்டிற்கு இப்பொழுது பலன் கிடைக்கும். இருப்பினும் வரவு செலவு கணக்குகளில் கவனம் செலுத்துவது நன்மையை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையாக செலவுகளும் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் பேச்சில் கவனத்தை கடைபிடிப்பது நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். பொறுமையுடனும் கவனத்துடனும் வேலையை செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். இருப்பினும் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனமாக செயலாற்றுவது மிகவும் முக்கியம். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு தக்ஷிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

கன்னி

கன்னிராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவில் லாபம் கிடைக்கும். அதனால் தொழிலை நல்ல முன்னேற்ற பாதையை நோக்கி செலுத்துவீர்கள். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும் வாரமாக இந்த வாரம் இருக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகரை வழிபட வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படும். ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை திறம்பட செய்து முடிப்பதன் மூலம் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதோடு மட்டுமல்லாமல் எதிர்பார்த்த சலுகைகளையும் பெற முடியும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுபடுத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். பிறரிடம் பேசும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் நன்மையை தரும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருக்கிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக எடுக்கும் முயற்சிகளுக்கு உதவிகள் கிடைக்கும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ரங்கநாத பெருமாள் வழிபட வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளித்துக் கொள்ளும் அளவிற்கு பண வரவு உண்டாகும். உடல்நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்ளும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். கடினமாக உழைத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைப்பதில் தாமதங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தொழிலைப் பொருத்தவரை உழைப்பிற்கு ஏற்ற லாபமே கிடைக்கும். முடிவுகள் எடுப்பதற்கு முன்பாக தக்க நபர்களிடம் ஆலோசனை பெற்று எடுப்பது சிறப்பை தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நம்பிக்கை நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது பிறரின் ஆலோசனை கேட்டு செயல்பட வேண்டும்.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். ஒரு சிலருக்கு வேலை ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்ளும் சூழ்நிலை உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக பயணம் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் சிறு சிறு உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். திருமணம் முயற்சிகள் வெற்றியடையும்.

வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். புதிதாக தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற வாரமாக இந்த வாரம் திகழும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் திறமையாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். வீண் விரயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நன்மையை தரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாக இருந்தாலும் அதை திறப்பட செய்து முடிப்பதன் மூலம் எதிர்பார்த்த சலுகைகளை பெறுவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது. தொழிலை பொருத்தவரை எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைக்கும் என்றாலும் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு வாராகி அன்னையை வழிபட வேண்டும்.
SHARE