Sunday, 10 March 2024

இன்றைய ராசிபலன் - 10.03.2024..!!!

SHARE


மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் நினைத்தது அப்படியே நடக்கும். நல்லது நினைத்தால் நல்லது, எதிர்மறையாக நினைத்தால் எதிர்மறையான செயல்களும் நடக்கும். ஆகவே இன்று நல்லதையே நினையுங்கள். இறை வழிபாட்டில் ஆர்வம் காட்டுங்கள். அடுத்தவர்களை கடினமான வார்த்தைகள் கொண்டு திட்டாதீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிறைவாக இருக்கும். விருந்தாளிகளின் வருகை சுப செலவுகளை ஏற்படுத்தும். மனநிறைவான நாளாக இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்க்காத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. நீண்ட நாள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எதிர்பாராத பண வரவு இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நன்மையை தரும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். திருமண வாழ்க்கை சந்தோஷத்தை கொடுக்கும்.

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பண பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சம்பளம் வந்தால் கையில் இருக்கும் பணம் எல்லாம் காலி. சம்பளம் வராதவர்களுக்கு சம்பளம் வராததே ஒரு பிரச்சனையாக இருக்கலாம். ஆகவே இன்று கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதிக வட்டிக்கு கடன் வாங்காதீங்க. தேவை என்றால் மட்டும் அடுத்தவர்களிடம் கைநீட்டி பணம் வாங்குங்கள். இல்லை என்றால் கூடுமானவரை நீங்களே பிரச்சனைகளை சமாளிக்க பாருங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருக்க வேண்டும். மனைவியிடம் கோபத்தோடு பேசக்கூடாது. நீங்க மனைவியாக இருந்தால் கணவரிடம் அன்பை மட்டுமே காட்டுங்கள். அடுத்தவர்களை குறைத்து எடை போட வேண்டாம். எதிரிகளுக்கும் பலம் அதிகம் என்று நினைத்து உஷாராக செயல்பட்டால் மட்டுமே இன்று வெற்றி காண முடியும். முன்கோபத்தை குறைத்து தக்க சமயத்தில் திறமையாக சிந்தித்து செயல்படுபவர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கும்.

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வெளியிடங்களுக்கு செல்லும்போது கவனமாக இருங்கள். கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை. வீட்டில் சமைக்கும் பெண்கள் முதல், வேலைக்கு செல்லும் ஆண்கள் வரை எல்லா விஷயத்திலும் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். தேவையில்லாத பயணத்தை தவிர்த்துக் கொள்வது நன்மையை தரும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வாரா கடன் வசூல் ஆகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதையும் உயரும். பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் சில பேருக்கு வாய்ப்பு உள்ளது. கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இது? தொழிலில் அதிக அக்கறை காட்டினால் அதிக லாபம் கிடைக்கும். அக்கறை குறைந்தால் பிரச்சனைகள் பெருகும் பார்த்துக்கோங்க.

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பிரச்சினையில் சிக்கி இருக்கும் போது தான் உறவுகளைப் பற்றிய பலத்தை தெரிந்து கொள்ள முடியும் என்று சொல்லுவார்கள். அதாவது கஷ்டத்தில் உதவுபவன் தான் நல்ல நண்பனாக இருக்க முடியும். நல்ல உறவாகவும் இருக்க முடியும். அதை நீங்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு சில சம்பவங்கள் இன்று நடக்கலாம். நல்ல அனுபவங்கள் கிடைக்கும் நாள் இது.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று மனநிலமை ரொம்பவும் தெளிவாக இருக்கும். எந்த பிரச்சினைக்கு எந்த முடிவு எடுப்பது என்று தீர்க்கமாக செயல்படுவீர்கள். அடுத்தவர்கள் பேச்சை நம்ப மாட்டீர்கள். எதிரிகள் இதனால் சோர்வடைந்து போவார்கள். உங்களுடைய புத்திசாலித்தனம் உங்களுக்கு இன்று வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். மேலதிகாரிகளின் பாராட்டை பெற்று தரும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த காரியங்கள் வெற்றியில் முடியும். வீட்டில் இருக்கும் முதியவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். பிள்ளைகளுடைய போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வேலை பணம் மட்டும் வாழ்க்கை கிடையாது, குடும்பம் மனைவி சந்தோஷம் இதையும் பார்க்க வேண்டும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலையை சந்தோஷமாக வரவேற்க வேண்டும் என்ற மனநிலையோடு, இன்றைய நாளை தொடங்க போறீங்க. உங்களுடைய சுறுசுறுப்பின் மூலம் நிறைய சந்தோஷம் கிடைக்கும். இதே போல தினமும் வேலை செய்ய வேண்டும் என்ற நல்ல எண்ணமும் தோன்றும். இன்று முன்னேற்றத்திற்கு தேவையான முயற்சிகளை எடுக்கலாம். இன்று மாலை சந்தோஷத்துக்கு எந்த குறைவும் வராது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இரண்டு பேர் வேலையை உங்களுடைய தலையில் கட்டி விடுவார்கள். இதனால் மன அழுத்தம் ஏற்படும். தேவையற்ற உடல் உபாதைகளும் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எவ்வளவு வேலை இருந்தாலும் ரிலாக்ஸா இருங்க. டென்ஷன் ஆகாதீங்க. டென்ஷன் ஆகும்போது பிரச்சனைகள் அதிகமாகவே தவிர பிரச்சனைகளுக்கான சொல்யூஷன் கிடைக்காது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. தேவையான ஓய்வை எடுத்துக் கொள்வீர்கள். இருந்தாலும் பணம் சம்பந்தப்பட்ட சிக்கல் உங்களை விடாது. ஏதாவது ஒரு ரூபத்தில் துரத்திக் கொண்டே இருக்கும். நிதி நிலைமை மோசமாகத்தான் இருக்கும். அதை சரி செய்ய தினமும் பிள்ளையாரை வழிபாடு செய்யுங்கள். நேர்மையாக நடந்து கொண்டால் பிரச்சனையிலிருந்து சீக்கிரம் வெளி வரலாம்.
SHARE